search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் ம.நடராஜன் படத்திறப்பு நிகழ்ச்சி - அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்பு
    X

    தஞ்சையில் ம.நடராஜன் படத்திறப்பு நிகழ்ச்சி - அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்பு

    தஞ்சையில் ம.நடராஜனின் நினைவேந்தல், படத்திறப்பு நிகழ்ச்சியில் இந்திய பொதுவுடமைக் கட்சி கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஆர்.நல்லக்கண்ணு கலந்துகொண்டு நடராஜனின் உருவப் படத்தை திறந்து வைத்தார்.
    தஞ்சாவூர்:

    சசிகலாவின் கணவரும், புதிய பார்வை இதழின் ஆசிரியருமான ம.நடராஜன் கடந்த 20-ந் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரது இறப்பை தொடர்ந்து சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து 15 நாள் பரோலில் வெளியே வந்தார். பின்னர் 21-ந் தேதி தஞ்சை மாவட்டம் விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் முன்பாக நடராஜனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    இதையடுத்து நடராஜனின் பூர்வீக வீட்டில் இருந்த சசிகலாவை ஏராளமான தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர்.

    இந்நிலையில் ம.நடராஜனின் நினைவேந்தல் - படத்திறப்பு நிகழ்ச்சி இன்று (30-ந் தேதி) காலை நடந்தது.

    தஞ்சை தமிழ் அரசி திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது.

    விழாவிற்கு உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தொடக்க உரை ஆற்றினார்.



    இந்திய பொதுவுடமைக் கட்சி கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஆர்.நல்லக்கண்ணு ம.நடராஜனின் உருவப் படத்தை திறந்து வைத்தார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ‘‘ம.நடராஜன் வாழ்க்கை வரலாறு’’ அடங்கிய புத்தகத்தை வெளியிட அதை மன்னார்குடி செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரி தாளாளர் வி.திவாகரன் பெற்றுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் ம.நடராஜனின் உருவ படத்திற்கு அனைத்துக் கட்சி தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. தேர்தல் பணிக்குழுத் தலைவர் எல்.கணேசன், முன்னாள் மாநில செயலாளர் பாண்டியன், இயக்குனர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,

    அ.தி.மு.க. அவைத் தலைவர் எஸ்.அன்பழகன், இந்திய தேசிய கட்சி சட்டமன்ற தலைவர் கே.ஆர்.ராமசாமி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொருளாளர் எம்.ரெங்கசாமி, தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சேகர், திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ், அ.ம.மு.க. தலைமை நிலைய செயலாளர் பி.பழனியப்பன், கொள்கை பரப்பு செயலாளர் தங்க.தமிழ்செல்வன், தீக்கதிர் ஆசிரியர் ராமலிங்கம், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான் பாண்டியன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் உ.தணியரசு, புலிப்படை முக்குலத்தோர் கருணாஸ், மனிதநேய ஜனநாயக கட்சி நிறுவனர் தமிமூன் அன்சாரி, தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன், தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சின்னசாமி, காவிரி பாசனம் அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், பன்னீர் செல்வம், மெர்லின், கலிய பெருமாள், தமிழ் தேச பேரியக்க தலைவர் பெ.மணியரசன், கவிஞர் காசி ஆனந்தன், சக்ரபர்த்தி, பட்டுகோட்டை எஸ்.இ.டி. பள்ளி தாளாளர் கோவிந்தராசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் ம.பழனிவேலு நன்றி கூறினார். #tamilnews
    Next Story
    ×