search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம் வந்தது ராம ராஜ்ஜிய ரத யாத்திரை - போராட்டம் நடத்தியவர்கள் கைது
    X

    தமிழகம் வந்தது ராம ராஜ்ஜிய ரத யாத்திரை - போராட்டம் நடத்தியவர்கள் கைது

    ராம ராஜ்ஜிய ரத யாத்திரை இன்று பலத்த பாதுகாப்புடன் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வந்து சேர்ந்தது. யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். #VHPRadhaYatra
    நெல்லை:

    ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவு திரட்டும் வகையில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை நடத்தப்படுகிறது. இந்த யாத்திரை கேரளாவில் இருந்து புறப்பட்டு தமிழகத்திற்கு வருவதற்கு பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ரத யாத்திரையை மறித்து போராட்டத்தில் ஈடுபடச் சென்ற திருமாவளவன், ஜவாஹிருல்லா, வேல்முருகன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், கேரள மாநிலத்தில் இருந்து புறப்பட்ட ராம ராஜ்ஜிய ரத யாத்திரை  இன்று காலை தமிழக எல்லையை அடைந்தது. தமிழக எல்லையான நெல்லை மாவட்டம் கோட்டைவாசல் பகுதிக்கு வந்து, அங்கிருந்து புளியரை நோக்கி புறப்பட்டது.

    பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரத யாத்திரைக்கும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டம் நடத்தினர். செங்கோட்டையில் ஏராளமானோர் திரண்டு  போராட்டம் நடத்தினர். ரத யாத்திரை தமிழக எல்லைக்கு வந்து சேர்ந்த தகவல் கிடைத்ததையடுத்து, போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர். #VHPRadhaYatra  #tamilnews

    Next Story
    ×