search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு
    X

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.23,368-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலை நிலையற்ற தன்மையுடன் உள்ளது. கடந்த 1-ந்தேதி ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 144 ஆக இருந்தது. பின்னர் விலை படிப்படியாக அதிகரித்தது.

    கடந்த 7-ந் தேதி அதிக பட்சமாக பவுன் ரூ.23 ஆயிரத்து 400-க்கு விற்றது. அதன் பிறகு விலை குறைந்தது. நேற்று ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 240 ஆக இருந்தது.

    இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.128 உயர்ந்தது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 368 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.16 அதிகரித்தது. ஒரு கிராம் ரூ.2,921-க்கு விற்கிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.41 ஆயிரத்து 600 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.41.60-க்கு விற்கிறது. #Tamilnews
    Next Story
    ×