search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூணில் கட்டி வைக்கப்பட்ட வாலிபர்
    X
    தூணில் கட்டி வைக்கப்பட்ட வாலிபர்

    ஓசூரில் நள்ளிரவில் வீடு புகுந்து திருட முயன்ற அசாம் வாலிபருக்கு தர்ம அடி

    ஓசூரில் நள்ளிரவில் வீடு புகுந்து திருட முயன்ற அசாம் வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் இரவு நேரங்களில் வீடு புகுந்து திருடுவதாகவும், இரவு நேரங்களில் தனியாக செல்லும் பெண்களை கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறிப்பதாகவும் அடிக்கடி புகார்கள் வந்தது.

    பகல் நேரத்தில் வீடுகளை நோட்டமிடும் கொள்ளையர்கள் இரவு நேரத்தில் அந்த வீடுகளில் புகுந்து கையில் கிடைக்கும் பொருட்கள் மட்டும் அல்ல, நகை பணத்தையும் திருடி சென்று விடுகிறார்கள்.

    ஓசூரில் வீடு புகுந்து திருடும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. அவர்களை பிடிக்க போலீசார் வியூகம் வைத்து இருந்தனர்.

    மேலும் வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது பொதுமக்களுக்கு தெரிந்து இருந்ததால் அவர்களை பிடிக்க வேண்டும் என்பதில் அவர்கள் தீவிரமாக இருந்தனர்.

    நேற்று நள்ளிரவு ஓசூர் காமராஜ் நகர் பகுதியில் 5 பேர் கொண்ட கொள்ளை கும்பல் அந்த பகுதியில் சுற்றி திரிந்தது.

    மேலும் அந்த கொள்ளையர்கள் ஒரு வீட்டுக்குள் புகுந்து கையில் கிடைத்த பொருட்களை அள்ளிக் கொண்டு இருந்தனர். அப்போது ஒரு பாத்திரம் தவறி விழுந்து சத்தம் கேட்டது. இதை பார்த்து கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்துள்ளனர் என்பதை அறிந்து கொண்ட அந்த வீட்டின் உரிமையாளர் சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர்.

    பொதுமக்கள் திரண்டு வருவதை அறிந்த கொள்ளையர்களில் 4 பேர் தப்பி ஓடி விட்டனர். ஒரு வாலிபர் மட்டும் சிக்கினார். அவரை தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் அங்குள்ள மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினார்கள்.

    பொதுமக்களிடம் சிக்கிய கொள்ளையன் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட காட்சி

    பின்னர் இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரை பிடித்து சென்று விசாரித்தனர்.

    விசாரணையில் அந்த வாலிபரின் பெயர் சச்சு (வயது23) என்பதும், அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய 4 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கொள்ளையர்கள் 5 பேரும் இதற்கு முன் வேறு ஏதாவது கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டார்களா? என்பது குறித்தும் ஓசூர் சிப்காட் போலீசார் விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×