search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடைகளை தாண்டி விமான சேவையை தொடங்கியுள்ளோம்: நாராயணசாமி பேட்டி
    X

    தடைகளை தாண்டி விமான சேவையை தொடங்கியுள்ளோம்: நாராயணசாமி பேட்டி

    புதுவையில் விமான சேவையை தொடங்க பல முட்டுக் கட்டைகளும், தடைகளும் இருந்தது. அவற்றை முறியடித்து சேவையை தொடங்கி உள்ளோம் என்று நாராயணசாமி கூறினார்.

    புதுச்சேரி:

    புதுவையில் இருந்து விமான சேவையை தொடங்கி வைத்த முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் இருந்து ஐதராபாத்துக்கு நேரடி விமான சேவையை தனியார் விமான நிறுவனம் மூலம் தொடங்கியுள்ளோம்.

    ஐதராபாத்திலிருந்து புதுவைக்கு 76 பயணிகள் வந்துள்ளனர். மத்திய அரசின் விமான துறையுடன் புதுவை அரசு கடந்த சில மாதத்துக்கு முன்பு ஒரு ஒப்பந்தம் செய்தது. சிறிய ரக விமான நிலையங்களை இணைக்க மத்திய அரசு உடான் என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது.

    இந்த திட்டத்தின்படி ஒரு இருக்கைக்கு ரூ.2 ஆயிரத்து 500 பயணிகளிடம் வசூலிக்கலாம். மீதமுள்ள தொகையை மத்திய அரசின் விமானத்துறை வழங்கும்.

    கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இத் திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளோம். விமான சேவையை தொடங்க பல முட்டுக் கட்டைகளும், தடைகளும் இருந்தது.

    அவற்றை முறியடித்து சேவையை தொடங்கி உள்ளோம். விமான சேவையை பயணிகள் மகிழ்ச்சியோடு வர வேற்றுள்ளனர்.

    புதுவையிலிருந்து ஐதராபாத் செல்ல சென்னை சென்று விமானம் மூலம் செல்ல வேண்டும். இதற்கு 7 மணி நேரமாகும். சாலை வழியாக சென்றால் 20 மணி நேரமாகும்.

    தற்போது புதுவை யிலிருந்து ஒரு மணி நேரத்தில் ஐதரபாத் செல்ல முடியும். இதனால் உள்நாட்டு பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் புதுவைக்கு வருவார்கள்.

    புதிய தொழிற்சாலைகள் வரவும் வாய்ப்புள்ளது. புதுவையிலிருந்து கொச்சின், திருப்பதி, பெங்களூரு, கோவை ஆகிய நகரங்களுக்கு விமான சேவை தொடங்க உள்ளோம்.

    இதைத்தொடர்ந்து புதுவையிலிருந்து டெல்லிக்கு இணைப்பு விமான சேவை தொடங்க வும் திட்டமிட்டுள்ளது.

    அடுத்தகட்டமாக அமைச்சர் கந்தசாமி தலைமையில் துறை முகத்தை இயக்க அனைத்து முயற்சிகளையும் எடுத் துள்ளோம். துறைமுகம் முகத்துவாரம் தூர் வாரப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

    விமானம், துறைமுகம் இரண்டும் மத்திய அரசின் திட்டங்கள். இந்த திட்டங்களை புதுவை அரசு பயன்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து கண்டெய்னர்கள் மூலம் சரக்குகளை கப்பல் மூலம் புதுவைக்கு கொண்டுவந்து தென்தமிழக பகுதிகளுக்கு அனுப்ப உள்ளோம்.

    விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்திற்கு தென்மாநில முதல்- அமைச்சர்கள் மாநாட்டில் கோரிக்கை வைத்தோம். தமிழக அரசு நிலம் தருவதாக உறுதி கூறினர்.

    தற்போது தமிழக அரசோடு மணல், விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக அமைச்சர்கள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள். விமான நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் தற்போது தமிழக அரசு இறங்கியுள்ளது. விமான சேவையை தொடங்க உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×