search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியா அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி - பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது
    X

    ஆஸ்திரேலியா அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி - பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது

    பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 80 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. #PAKvsAUS
    அபுதாபி:

    ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய 3-வது ஒருநாள் போட்டி அபுதாபியில் நேற்று பகல்-இரவாக நடந்தது.

    முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 266 ரன் குவித்தது.

    கேப்டன் ஆரோன் பிஞ்ச் ‘ஹாட்ரிக்‘ சாதனை வாய்ப்பை தவற விட்டார். முதல் ஆட்டத்தில் 116 ரன்னும், 2-வது ஆட்டத்தில் 153 ரன்னும் குவித்த அவர் இந்த ஆட்டத்தில் 90 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

    மேக்ஸ்வெல் 55 பந்தில் 71 ரன்னும் (8 பவுண்டரி, 1 சிக்சர்), ஹேண்ட்ஸ் ஹோம் 47 ரன்னும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி 44.4 ஓவரில் 186 ரன்னில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலியா 80 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இமாம்-உல்- ஸ்ரீக் 46 ரன்னும், இமாத் வாசிம் 43 ரன்னும் எடுத்தனர். ஆடம் ஜம்பா 4 விக்கெட்டும், கும்மின்ஸ் 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    ஆஸ்திரேலியா ‘ஹாட்ரிக்’ வெற்றியை பெற்று தொடரை வென்றது. அந்த அணி முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது.

    ஏற்கனவே டெஸ்ட் தொடரையும் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. 20-20 தொடரை பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் வென்று இருந்தது.

    ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி துபாயில் நாளை நடக்கிறது. #PAKvsAUS
    Next Story
    ×