search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரன் குவிக்க ஆடுகளம் மிகவும் கடினமாக இருந்தது: டோனிக்கு பும்ரா, மேக்ஸ்வெல் ஆதரவு
    X

    ரன் குவிக்க ஆடுகளம் மிகவும் கடினமாக இருந்தது: டோனிக்கு பும்ரா, மேக்ஸ்வெல் ஆதரவு

    டோனி 37 பந்துகளை சந்தித்து 29 ரன்கள் மட்டுமே எடுத்து, கடைசி நேரத்தில் ஒரு ரன் எடுக்க முயற்சி செய்யவில்லை என்பதே தோல்விக்குக் காரணம் என விமர்சிக்கப்படுகிறது #SAvSL
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தியா முதல் 10 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் சேர்த்திருந்தது. 3-வது விக்கெட்டாக ரிஷப் பந்த் ஆட்டமிழந்ததும் டோனி களம் இறங்கினார்.

    அதன்பின் இந்தியாவின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. டோனி 37 பந்துகளை சந்தித்து 29 ரன்கள் மட்டுமே சேர்த்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் ஒரு சிக்சர் மட்டுமே அடித்தார். கடைசி நான்கு ஓவர்களில் பெரும்பாலும் ஒரு ரன்னிற்கு அவர் ஓடவில்லை.

    இதனால் அவர் மீது விமர்சனம் எழும்பியுள்ளது. இந்நிலையில் மேக்ஸ்வெல், பும்ரா ஆகியோர் டோனிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

    டோனி ஆட்டம் குறித்து பும்ரா கூறுகையில் ‘‘நாங்கள் எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்தோம்.  பாதாளத்திற்குச் சென்ற ஆட்டத்தை திரும்பவும் நல்ல நிலைமைக்கு எடுத்துச்செல்ல டோனி முயற்சி செய்தார்.



    நாங்கள் 15 முதல் 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம் என்று நினைக்கிறேன். ஆனால், நாங்கள் பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்டு கடும் நெருக்கடி கொடுத்தோம். ஆகவே, டோனி அவரது திட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்ததாக நினைக்கிறேன்’’ என்றார்.

    ‘‘டோனி 37 பந்தில் 29 ரன்கள் அடித்தது போதுமான ஸ்டிரைக்-தான். ஆடுகளத்தை பொறுத்த வரைக்கும் எந்தவொரு பேட்ஸ்மேன் ஆக இருந்தாலும் ரன் குவிக்க இயலாத வகையில் கடினமாக இருந்தது. டோனி உலகத்தரம் வாய்ந்த பினிஷர். நடு பேட்டில் பந்தை மீட் செய்வதற்காக டோனி கடினமாக முயற்சி செய்தார்.



    இறுதியாக கடைசி ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்தார். கடைசி 7 ஓவரில் அது மட்டும்தான் பவுண்டரி கோட்டை தாண்டியது. இதில் இருந்தே ஆடுகளம் எப்படி இருந்திருக்கும் என்பது தெரியவரும். கடைசி சில ஓவர்களுக்கு முன் டோனி இந்த சிக்ஸை அடித்திருந்தால், அது மிகப்பெரிய முயற்சியாக இருந்திருக்கும்’’ என்றார்.
    Next Story
    ×