search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 289 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா
    X

    முதல் ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 289 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

    சிட்னியில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு 289 ரன்கள் வெற்றி இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்தது. #AUSvIND #bhuvneshwarkumar
    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றி  சாதனைப் படைத்தது. இதையடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன. இதில், இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசியது. துவக்க வீரர்களான ஆரோன் பிஞ்ச், 6 ரன்கள் எடுத்த நிலையிலும், கேரே 24 ரன்கள் எடுத்த நிலையிலும் வெளியேறினர்.



    அதன்பின்னர் மார்ஸ்-கவாஜா ஜோடி நிதானமாக விளையாடி அரை சதம் அடித்தனர்.



    கவாஜா 81 பந்துகளில் 59 ரன்கள் (6 பவுண்டரி) அடித்து ஜடேஜா ஓவரில் எல்பிடபுள்யூ முறையில் வெளியேறினார். மார்ஸ் 70 பந்துகளில் 54 ரன்கள் (4 பவுண்டரி) எடுத்து குல்தீப் யாதவ் பந்தில் வெளியேறினர். அடுத்து வந்த பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் மற்றும் ஸ்டாயின்ஸ் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர்.



    ஹேண்ட்ஸ்கோம்ப் 61 பந்துகளில் 73 ரன்கள் (6 பவுண்டரி, 2 சிக்சர்) குவித்து வெளியேறினார். ஸ்டாயின்ஸ் கடைசி வரை அவுட் ஆகாமல் 43 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தும், மேக்ஸ்வெல் 5 பந்துகளில் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்தியா தரப்பில் புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்களும், ஜடேஜா 1 விக்கெட்டும் விழ்த்தினர். முகமது சமி, கலீல் அகமது விக்கெட் கிடைக்கவில்லை.

    இதையடுத்து 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது.#AUSvIND #bhuvneshwarkumar
    Next Story
    ×