search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லண்டன் ஓவல் டெஸ்ட் - இரண்டாம் நாள் ஆட்டத்தின் தேனீர் இடைவேளையில் இந்தியா 53 /1
    X

    லண்டன் ஓவல் டெஸ்ட் - இரண்டாம் நாள் ஆட்டத்தின் தேனீர் இடைவேளையில் இந்தியா 53 /1

    இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் தேனீர் இடைவேளையின் போது இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND
    லண்டன்:

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. 

    டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர் குக் அரை சதமடித்து 71 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து மொயின் அலியும் அரை சதமடித்து ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறிது நேரத்தில் அடில் ரஷித் அவுட்டானார். ஆனால், ஸ்டூவர்ட் பிராடு, ஜோஸ் பட்லர் ஜோடி இந்திய அணியை நன்கு சோதித்தது. உணவு இடைவேளைக்கு பிறகு ஸ்டூவர்ட் பிராடு, ஜோஸ் பட்லரை ரவீந்திர ஜடேஜா அபாரமாக வெளியேற்றினார். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 332 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா, பும்ரா தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.



    இதைத்தொடர்ந்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடர்ந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுலும், ஷிகர் தவானும் களமிறங்கினர்.

    ஆட்டத்தின் இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் ஷிகர் தவானை 3 ரன்னில் வெளியேற்றி அதிர்ச்சி அளித்தார் ஸ்டூவர்ட் பிராடு. அவரை தொடர்ந்து புஜாரா களமிறங்கினார்.

    ராகுலும், புஜாராவும் நிதானமாக ஆடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். இதையடுத்து, தேனீர் இடைவேளை வரை இந்தியா ஒரு விக்கெட்டுக்கு 53 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND
    Next Story
    ×