search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லண்டன் ஓவல் டெஸ்ட் - மதிய உணவு இடைவேளையில் இங்கிலாந்து 68/1
    X

    லண்டன் ஓவல் டெஸ்ட் - மதிய உணவு இடைவேளையில் இங்கிலாந்து 68/1

    இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND
    லண்டன்:

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கியது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    இங்கிலாந்து அணியில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. இந்திய அணியில் ஹனுமா விஹாரி அறிமுகமாகியுள்ளார். இந்திய அணியில் அறிமுகமாகும் 292-வது டெஸ்ட் வீரர் இவராவார். ஹர்திக் பாண்டியா, அஸ்வின் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

    இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலெஸ்டர் குக் மற்றும் ஜென்னிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினர்.

    அணியின் எண்ணிக்கை 60 ஆக இருந்தபோது, ஜென்னிங்சை வெளியேற்றினார் ரவீந்திர ஜடேஜா. ஜென்னிங்ஸ் 23 ரன்களில் அவுட்டானார். அவரை தொடர்ந்து மொயின் அலி களமிறங்கினார்.

    உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டுக்கு 68 ரன்கள் எடுத்திருந்தது. அலெஸ்டர் குக் 37 ரன்னுடனும், மொயின் அலி 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். #ENGvIND
    Next Story
    ×