search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4
    X

    டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4

    டிரென்ட் பிரிட்ஜ் 3-வது டெஸ்டில் 84 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து இங்கிலாந்து திணறி வருகிறது #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. விராட் கோலி 97 ரன்களும், ரகானே 81 ரன்களும் அடித்தனர். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 161 ரன்னில் சுருண்டது. ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    168 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. விராட் கோலி (103), புஜாரா (72), ஹர்திக் பாண்டியா (52 நாட்அவுட்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    இதன் மூலம் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து இந்தியா ஒட்டுமொத்தமாக 520 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இங்கிலாந்துக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணியின் அலஸ்டைர் குக், ஜென்னிங்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்திருந்தது. குக் 9 ரன்னுடனும், ஜென்னிங்ஸ் 13 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜென்னிங்ஸ் நேற்றைய 13 ரன்னிலேயே இஷாந்த் ஷர்மா பந்தில் ஆட்டமிழந்தார். குக் 17 ரன்கள் எடுத்த நிலையில் இஷாந்த் ஷர்மா பந்தில் வெளியேறினார்.

    அடுத்து வந்த ஜோ ரூட் 13 ரன்னில் பும்ரா பந்திலும், போப் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தார். இவர்களை லோகேஷ் ராகுல், விராட் கோலி சிறப்பாக கேட்ச் பிடித்து வெளியேற்றினார்கள்.



    5-வது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸ் உடன் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. இங்கிலாந்து 4-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 4 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்துள்ளது. பட்லர் 19 ரன்னுடனும், பென் ஸ்டோக்ஸ் 3 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    Next Story
    ×