search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் -உணவு இடைவேளையில் இந்தியா 82/3
    X

    இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் -உணவு இடைவேளையில் இந்தியா 82/3

    நாட்டிங்காமில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் உணவு இடைவேளை வரை இந்தியா 3 விக்கெட்டுக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND #INDvENG
    நாட்டிங்காம்:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இதில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பர்மிங்காமில் நடந்த முதல் போட்டியில் 31 ரன் வித்தியாசத்திலும், லண்டனில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்திலும் இந்திய அணி தோற்று 0-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.

    இந்நிலையில், இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்தியா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.

    இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், லோகேஷ் ராகுலும் இறங்கினர். 
    இந்த ஜோடி மிகவும் நிதானமாக ஆடி அரை சதத்தை கடந்தது.

    அணியின் எண்ணிக்கை 60 ஆக இருக்கும்போது ஷிகர் தவான் 7 பவுண்டரிகளுடன் 35 ரன்களில் அவுட்டானார். அவரை தொடர்ந்து புஜாரா களமிறங்கினார்.

    சிறிது நேரத்தில் பொறுமையுடன் விளையாடிய லோகேஷ் ராகுல் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய புஜாராவும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அவர் 14 ரன்களில் வெளியேறினார்.

    முதல் நாள் உணவு இடைவேளை வரையில் இந்திய அணி 26.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

    இந்திய அணியின் முக்கியமான 3 விக்கெட்டுகளையும் இங்கிலாந்து பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் கைப்பற்றினார்.  #ENGvIND #INDvENG
    Next Story
    ×