search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஞ்சி டிராபியில் 37 அணிகள்- 2000 உள்ளூர் போட்டிகளில் விளையாடுகிறது- பிசிசிஐ
    X

    ரஞ்சி டிராபியில் 37 அணிகள்- 2000 உள்ளூர் போட்டிகளில் விளையாடுகிறது- பிசிசிஐ

    ரஞ்சி டிராபியில் மேலும் 9 அணிகள் இடம்பிடித்து 37 அணிகள் உள்ளூர் தொடர்களில் விளையாட இருக்கிறது. இதில் வடகிழக்கு மாநிலங்கள் இணைந்துள்ளன. #BCCI
    வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், மேகாலயா, மிசோரம், அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, உத்தரகாண்ட் மற்றும் பீகார் அணிகளுக்கு ரஞ்சி டிராபியில் விளையாட அனுமதி கொடுக்கப்பட்டதால் இந்த சீசனில் 37 அணிகள் பங்கேற்கின்றன. அத்துடன் இளையோர் கிரிக்கெட் தொடரிலும் விளையாட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டும் உள்ளூர் தொடர்களில் 2000 ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன.

    சீனியர் பெண்களுக்கான சேலஞ்சர் டிராபி ஆகஸ்ட் மாதம் 13-ந்தேதியில் இருந்து 20-ந்தேதி வரை நடக்கிறது. ஆண்களுக்கான துலீப் டிராபி ஆகஸ்ட் 17-ந்தேதி முதல் செப்டம்பர் 9-ந்தேதி வரை நடக்கிறது.

    தேசிய ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே செப்டம்பர் 19-ந்தேதி முதல் அக்டோபர் 20-ந்தேதி வரை 31 நாட்கள் நடைபெறுகின்றன. இதில் 160 போட்டிகள் நடைபெறும்.

    ரஞ்சி டிராபி நவம்பர் 1-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 6-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதிலும் 160 போட்டிகள் நடைபெறும்.



    தேசிய டி20 சாம்பியன்ஷிப்பான சையத் முஷ்டாக் அலி டிராபியில் 140 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. அதுபோக 23 வயதிற்கு உட்பட்டோருக்கான தொடரில் 302 போட்டிகளும், 19 வயதிற்கு உட்பட்டோருக்கான தொடரில் 286 போட்டிகளும் நடைபெற இருக்கின்றன.

    சீனியர் பெண்கள் அணி 23 வயதிற்கு உட்பட்டோருக்கான தொடரில் 292 போட்டிகளிலும், அத்துடன் 295 போட்டிகளிலும் விளையாட இருக்கிறது.
    Next Story
    ×