search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பந்தை தட்டிப்பறித்து கோல் அடிக்க 63 கிலோ மீட்டர் ஓடிய குரோசியா கேப்டன்
    X

    பந்தை தட்டிப்பறித்து கோல் அடிக்க 63 கிலோ மீட்டர் ஓடிய குரோசியா கேப்டன்

    உலகக்கோப்பை கால்பந்தில் தொடரில குரோசியா கேப்டன் லூகா மோட்ரிச் பந்தை கடத்த 63 கிலோ மீட்டர் தூரம் ஓடி அசத்தியுள்ளார். #WorldCup2018 #Modric
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கிய இந்த திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பிரான்ஸ் - குரோஷியா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது.

    உலகக்கோப்பை தொடரில் சில நேரங்களில் ஜாம்பவான்கள், விமர்சகர்கள் போன்றோரின் கணிப்புகள் தவறாகிவிடும். தற்போது அதுதான் நடந்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் குரோசியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் வலுவான மிட்பீல்லர் பகுதிதான்.



    குரோசியா அணி கேப்டன் லூகா மோட்ரிச் மில்பீல்டர் பதகுதியில் முதுகெலும்பாக திகழ்கிறார். அவரை தாண்டி பந்தை கடத்திச் செல்வது கடினம். அதேபோல் அவர் கையில் பந்து கிடைத்தால் புயல் வேகத்தில் பந்தை எதிரணி கோல் எல்லைக்குள் கொண்டு சென்று விடுவார்.

    இதுவரை குரோசியாக மூன்று லீக், நாக்அவுட், காலிறுதி, அரையிறுதி என 6 போட்டியில் விளையாடியுள்ளது. இந்த 6 போட்டியிலும் லூகா மோட்ரிச் பந்தை கடத்துவதற்காக 63 கிலோ மீட்டர் தூரம் ஓடியுள்ளார். ஒரு போட்டிக்கு சராசரியாக 10.5 கிலோ மீட்டர் ஓடியுள்ளார். இதுதான் இதுவரை அதிகபட்ச தூரமாக உள்ளது.
    Next Story
    ×