search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புனேயில் நடைபெற இருக்கும் பிளேஆப் சுற்று ஆட்டம் லக்னோவுக்கு மாற்றம்?
    X

    புனேயில் நடைபெற இருக்கும் பிளேஆப் சுற்று ஆட்டம் லக்னோவுக்கு மாற்றம்?

    புனேயில் நடைபெற இருந்த ‘பிளேஆப்’ சுற்றின் 2 ஆட்டங்கள் லக்னோவுக்கு மாற்றப்பட அதிகமான வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ‘பிளேஆப்’ சுற்றின் இரண்டு ஆட்டங்கள் புனேயில் நடைபெறுகிறது.

    ‘எலிமினேட்டர்’ ஆட்டம் மே 23-ந் தேதியும், ‘குவாலி பையர் 2’ ஆட்டம் மே 25-ந் தேதியும் அங்கு நடத்தப்படுகிறது.

    இந்த நிலையில் புனேயில் நடைபெற இருக்கும் இரண்டு ‘பிளேஆப்’ ஆட்டங்கள் அங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்றப்படலாம் என்று தெரிகிறது.

    காவிரி போராட்டம் காரணமாக சென்னையில் நடைபெற இருந்த எஞ்சிய 6 ஆட்டங்கள் புனேக்கு மாற்றப்பட்டது. இதில் ஒரு ஆட்டம் கடந்த 20-ந்தேதி நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட்டங்கள் புனேக்கு மாற்றப்பட்டதால் அங்கு நடைபெற இருந்த ‘பிளே ஆப்’ ஆட்டங்கள் மாற்றப்படுகிறது.

    புனேயில் நடைபெற இருந்த ‘பிளேஆப்’ சுற்றின் 2 ஆட்டங்கள் லக்னோவுக்கு மாற்றப்படலாம் என்று தெரிகிறது. 50 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வகையில் லக்னோவில் ஸ்டேடியம் இருப்பதால் அங்கு மாற்றப்பட அதிகமான வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    ஆனாலும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

    இதேபோல கொல்கத்தா, ராஜ்கோட் ஆகிய நகரங்களும் இதற்கான போட்டியில் உள்ளன. கிரிக்கெட் வாரிய முன்னாள் செயலாளர் நிரஞ்சன்ஷா ராஜ்கோட்டில் ‘பிளேஆப்’ சுற்று ஆட்டத்தை நடத்தும் ஆர்வத்தில் உள்ளார்.

    கடந்த ஐ.பி.எல். போட்டியில் ரைசிங்புனே 2-வது இடத்தை பிடித்ததால் ‘2 பிளே ஆப்’ சுற்றுஆட்டத்தை நடத்தும் வாய்ப்பை பெற்றது. அந்த அணி விளையாடா விட்டாலும் இந்த வாய்ப்பை பெற்றது.

    சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ‘லீக்‘ ஆட்டம் புனேக்கு மாற்றப்பட்டதால் தற்போது ‘பிளேஆப்’ ஆட்டத்தை நடத்தும் வாய்ப்பை இழக்கிறது.
    Next Story
    ×