search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அப்ரிடிக்கு பதிலடி கொடுக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்
    X

    அப்ரிடிக்கு பதிலடி கொடுக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்

    காஷ்மீர் பிரச்சனை குறித்து டுவிட் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
    புதுடெல்லி:

    ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அடிக்கடி இந்திய எல்லைக்குள் உடுருவி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த சண்டையில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என பலர் உயிரிழந்து வருகிறார்கள். இந்த சண்டையால் இரு நாடுகளுக்கு இடையிலான விளையாட்டு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில்தான் பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் ஆன அப்ரிடி காஷ்மீர் பிரச்சினை குறித்து டுவிட் செய்துள்ளார். அதில் ‘‘இந்தியா ஆக்கரமிப்பு காஷ்மீரில் அபாயகரமான மற்றும் மோசமான சூழ்நிலை நடந்து கொண்டிருக்கிறது. அடக்குமுறை ஆட்சியால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக குரல் கொடுங்கள். ஐநா சபை மற்றும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகள் எங்கே?. அவர்கள் ஏன் இதை நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை’’ என பதிவு செய்திருந்தார்.

    இதற்கு கவுதம் காம்பீர் ட்விட் மூலம் நறுக்கென பதில் அளித்துள்ளார். அவர் தனது ட்டுவிட்டில் ‘‘அப்ரிடியின் ட்விட்டிற்கு பதில் அளியுங்கள் என்று என்னிடம் மீடியாக்கள் கேட்கிறது. இதில் சொல்வதற்கு என்ன இருக்கிறது?. அப்ரிடி தனது தவறான டிக்சனெரியில் UN என்றால் ‘‘Under Ninteen’’ என்று அர்த்தம் புரிந்துள்ளார். மீடியாக்கள் இதுபற்றி கவலை கொள்ள வேண்டாம். இது அப்ரிடி நோ-பால் பந்தில் விக்கெட் விழுவதை கொண்டாடுவது போன்றது’’ என்று நறுக்கென்று பதில் அளித்தார்.

    இந்நிலையில், சச்சின், கோலி, ரெய்னா மற்றும் கபில் தேவ் போன்ற கிரிக்கெட் வீரர்களும் அப்ரிடியின் ட்விட்டிற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

    கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், 'எங்கள் நாட்டு மக்கள் அனைத்து பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும் திறமை கொண்டவர்கள். அதனால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை வேறு யாரும் சொல்ல தேவையில்லை' என கூறியுள்ளார்.

    அதே போல் சுரேஷ் ரெய்னா 'காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. அது எங்கள் நாட்டுடன் தான் இருக்கும். அது எங்கள் முன்னோர்கள் பிறந்த இடம். காஷ்மீரில் நடத்தப்படும் தீவிரவாத தாக்குதலை தடுத்து நிறுத்தமாறு பாகிஸ்தான் ராணுவத்திடம் கூறுங்கள். நாங்கள் அமைதியை விரும்புகிறோம். வன்முறையை அல்ல' என அப்ரிடிக்கு பதில் அளித்தார்.

    இது குறித்து மீடியாக்கள் கேட்ட கேள்விக்கு, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, 'இந்த பிரச்சனை குறித்து எனக்கு தெரியும். ஒருவர் தனது கருத்துகளை அவர்கள் நாட்டுடன் வைத்துக்கொள்ள வேண்டும்' என அப்ரிடிக்கு பதில் அளித்துள்ளார். இதையடுத்து, கபில் தேவ் 'இது போன்றவர்களின் கருத்திற்கு பதில் அளிக்காமல் இருப்பதே சிறந்தது. நான் அரசின் கொள்கைகளை மதிக்கிறேன்' என கூறினார். 
    Next Story
    ×