search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Afridi"

    • அதிர்ஷ்டத்தால் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு வரவில்லை என அக்தர் கூறினார்.
    • இறுதிப் போட்டியில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்தால் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன்.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று உலகக் கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில் இந்தியாவின் தோல்விக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் காரணம் தெரிவித்துள்ளனர்.

    அப்ரிடி (பாகிஸ்தான் முன்னாள் வீரர்):

    எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் அந்த நம்பிக்கை ஏற்படும். இதுவே இந்திய அணியின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தது. நாம் அனைவரும் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் இதை அனுபவித்து இருப்போம். டிரெவிஸ் ஹெட் சதம் அடித்தபோது ரசிகர்கள் அமைதியாக இருந்தது ஏன்? இது மிகப்பெரிய சதமாகும். குறைந்தபட்சம் ஒரு சிலராவது எழுந்து நின்று பாராட்டி இருக்கலாம்.

    சோயிப் அக்தர் (பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீரர்):

    அதிர்ஷ்டத்தால் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு வரவில்லை. அபாரமாக விளையாடிதான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இறுதிப் போட்டியில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்தால் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். அதிக பவுன்ஸ் மற்றும் வேகம் இருந்திருந்தால் டாஸ் மிக முக்கிய பங்கு வகித்து இருக்காது என்றார்.

    ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு ஆடுகளம் உகந்ததாக அமைந்ததுதான் காரணம் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் உசேன் தெரிவித்துள்ளார்.

    • அப்ரிடி 7 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை கைப்பற்றி உள்ளார்.
    • டாப் 10-ல் இந்திய பந்து வீச்சாளர்களில் சிராஜ், குல்தீப் யாதவ் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் ஒருநாள் போட்டிகளின் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் அப்ரிடி முதல் இடத்தை பிடித்துள்ளார். இவர் 7 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை கைப்பற்றி உள்ளார்.

    டாப் 10-ல் இந்திய பந்து வீச்சாளர்களில் சிராஜ், குல்தீப் யாதவ் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். சிராஜ் 3-வது இடத்திலும் குல்தீப் 7-வது இடத்தில் உள்ளனர். பும்ரா 11-வது இடத்தில் தொடர்கிறார்.

    முதல் இடத்தை பிடித்துள்ள அப்ரிடி நடப்பு உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜம்பாவுடன் இணைந்துள்ளார். இருவரும் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

    • ஷாகின் அப்ரிடிக்கு எதிராக முதல் ஓவரிலேயே சிக்சர் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை ரோகித் படைத்தார்.
    • ஆசிய கோப்பையில் 23 சிக்சர் அடித்த ஜெயசூர்யாவின் சாதனையை ரோகித் முறியடித்தார்.

    கொழும்பு:

    16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை இலங்கை, பாகிஸ்தான் இணைந்து நடத்துகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழைந்தன.

    இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று நடைபெற்ற சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அதிரடியாக விளையாடினார். இந்த ஜோடி 121 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கம் கொடுத்தனர். இருவரும் அரைசதம் அடித்த நிலையில் ரோகித் சர்மா 56 ரன்களிலும், சுப்மன் கில் 58 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    இந்திய அணி 24.1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடிக்கு எதிராக முதல் ஓவரிலேயே சிக்சர் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்தார்.

    மேலும் இந்த ஆட்டத்தில் அவர் 4 சிக்சர்கள் அடித்திருந்தார். அதன் மூலம் 50 ஓவர் ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற பாகிஸ்தானின் ஷாஹித் அப்ரிடியின் சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார். ஆசிய கோப்பையில் 23 சிக்சர் அடித்த ஜெயசூர்யாவின் சாதனையை ரோகித் முறியடித்தார்.

    அதிக சிக்சர்கள் அடித்த முதல் 3 வீரர்கள் விவரம் பின்வருமாறு;-

    1. ஷாஹித் அப்ரிடி : 26 (21 இன்னிங்ஸ்) 1. ரோஹித் சர்மா : 26* (24 இன்னிங்ஸ்)

    2. சனாத் ஜெயசூர்யா : 23 (24 இன்னிங்ஸ்)

    3. சுரேஷ் ரெய்னா : 18 (13 இன்னிங்ஸ்)

    அத்துடன் டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து இலங்கை மண்ணில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற கிறிஸ் கெயில் படைத்திருந்த சாதனையையும் உடைத்து ரோகித் புதிய வரலாறு படைத்துள்ளார்.

    அந்த பட்டியல்: 1. ரோகித் சர்மா : 33*

    2. கிறிஸ் கெயில் : 30

    3. ஷாஹித் அப்ரிடி : 29

    4. சுரேஷ் ரெய்னா : 25

    • அப்ரிடிக்கு பதிலாக ஹாரிஸ் ரவுஃப் களமிறங்குகிறார்.
    • இலங்கை அணியின் மஹீஷ் தீக்ஷனாவும் காயம் காரணமாக இப்போட்டியில் பங்கேற்க மாட்டார்.

    பாகிஸ்தான் அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக அப்துல்லா ஷபீக் தேர்வு செய்யப்பட்டார்.

    இலங்கை அணிக்கு எதிராக 341 ரன்கள் சேசிங் செய்ததன் மூலம் பாகிஸ்தான் அணி அதிக ரன்கள் சேசிங் செய்த பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன்னர் இதே அணிக்கு எதிராக 382 ரன்கள் பாகிஸ்தான் அணி சேசிங் செய்துள்ளது.


    இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 24-ந் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அப்ரிடி காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு பதிலாக ஹாரிஸ் ரவுஃப் களமிறங்குகிறார். இது அவருக்கு முதல் டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

    இலங்கை அணியின் மஹீஷ் தீக்ஷனாவும் காயம் காரணமாக இப்போட்டியில் பங்கேற்க மாட்டார் என்பதை இலங்கை கிரிக்கெட் போர்ட் தெரிவித்தது.

    இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் கிறிஸ்கெய்ல் 12 சிக்சர்கள் அடித்ததன் மூலம் அதிக சிக்சர் அடித்த பாகிஸ்தான் வீரர் அப்ரிடியை இவர் முந்தியுள்ளார். #WIvEnd #ChrisGayle #Afridi
    சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை சேர்ந்த சகீத் அப்ரிடி 476 சிக்சர் அடித்து முதல் இடத்தில் உள்ளார். டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டியில் சேர்த்து அவர் இதை எடுத்தார். வெஸ்ட்இண்டீஸ் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ்கெய்ல் 476 சிக்சருடன் அதே நிலையில் இருந்தார்.

    இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் கிறிஸ்கெய்ல் 12 சிக்சர்கள் அடித்தார். முதல் சிக்சர் மூலம் அவர் அப்ரிடியை முந்தினார்.

    39 வயதான கிறிஸ்கெய்ல் 488 சிக்சர்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். 444 போட்டியில் அவர் இதை எடுத்துள்ளார். அவர் ஒருநாள் போட்டியில் 287 சிக்சர்களும், டெஸ்டில் 98 சிக்சர்களும், 20 ஓவர் போட்டியில் 103 சிக்சர்களும் அடித்துள்ளார். #WIvEnd #ChrisGayle #Afridi
    காஷ்மீர் குறித்து அப்ரிடி கருத்து கூறியுள்ளதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அரசியல் கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்று ஜாவித் மியான்டட் அறிவுரை வழங்கியுள்ளார். #javedmiandad #afridi

    கராச்சி:

    பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் சகீத் அப்ரிடி. கடந்த 2 தினங்களுக்கு முன்பு அவர் காஷ்மீர் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்தார்.

    காஷ்மீரை இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் சொந்தம் கொண்டாடக் கூடாது. அந்த நாட்டை தனி நாடாக அறிவிக்க வேண்டும். பாகிஸ்தானில் உள்ள 4 மாகாணங்களையே நிர்வகிக்க திணறும் போதும் பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை என்று அவர் கருத்து தெரிவித்து இருந்தார்.

    அப்ரிடியின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


    பின்னர் தனது கருத்தை இந்திய ஊடகங்கள் திரித்து வெளியிட்டதாக அவர் மறுப்பு தெரிவித்தார். இது தொடர்பாக அப்ரிடி கூறும்போது, “நான் சொன்ன கருத்தில் சிலவற்றை இந்திய ஊடகங்கள் விட்டுவிட்டன. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தம் என்று நான் கூறி இருந்தேன்” என்றார்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அரசியல் கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்று முன்னாள் வீரர் ஜாவித் மியான்டட் அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் கராச்சியில் கூறியதாவது:-

    காஷ்மீர் விவகாரத்தில் அப்ரிடி பேசியது உகந்தாக இல்லை. அவர் அதை தவிர்த்து இருக்க வேண்டும். கிரிக்கெட் வீரர்கள் இதுபோன்ற அரசியலில் கருத்துக்களை பேசக்கூடாது. அவர்கள் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு மியான்டட் கூறியுள்ளார். #javedmiandad #afridi

    கால்பந்து உலகக்கோப்பையில் ஜெர்மனி தொடக்க சுற்றோடு வெளியேறியது குறித்து அப்ரிடி எமோசனலாக டுவிட் செய்துள்ளார். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. உலகக்கோப்பை ஜூரம் ரசிகர்களை மட்டும் ஆட்டிப்படைக்கவில்லை. மற்ற விளையாட்டுத்துறையில் சாதித்த மற்றும் சாதிக்கும் அணிகளையும் ஆட்டிப்படைத்து வருகிறது.

    பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் ஷாகிப் அப்ரிடி. இவருக்கு பிடித்தமான அணி ஜெர்மனி. நடப்பு சாம்பியனான ஜெர்மனி நேற்று 0-2 எனத் தோல்வியை தழுவி தொடக்க சுற்றோடு வெளியேறியது. இது ஜெர்மனி ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஜெர்மனி தோல்வி அப்ரிடியையும் அப்செட் ஆக்கியுள்ளது. 1938-ம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக ஜெர்மனி தொடக்க சுற்றோடு வெளியேறி மோசமான சாதனைக்குள்ளாகியுள்ளது.


    ஜெர்மனி தோல்வி குறித்து ஒருவர் பதிவு செய்திருந்த டுவிட்டிற்கு, அப்ரிடி பதில் அளிக்கையில் ‘‘சாம்பியன்ஸ் எப்போதும் தோற்பதில்லை, புரோ. அவர்கள் கொஞ்சம் ஓய்வு எடுத்துள்ளார்கள். அடுத்த முறை வலுவான அணியாக திரும்பி வருவார்கள். ஆனால், ஜெர்மனி அணி அதன் ரசிகர்களை இழந்ததுதான் ஏமாற்றம் அளிக்கிறது. தைரியமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொரியாவிற்கு வாழ்த்துக்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.



    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக விளையாடும் உலக லெவன் அணியில் இருந்து மோர்கன் விலகியதால், அப்ரிடி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ் - ஐசிசி உலக லெவன் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டி20 போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நாளைமறுநாள் (31-ந்தேதி) நடைபெறுகிறது. இதற்கான உலக லெவன் அணியின் கேப்டனாக இங்கிலாந்து ஒருநாள் அணி கேப்டன் மோர்கன் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

    தற்போது அவரது கைவிரலில் முறிவு ஏற்பட்டுள்ளதால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிடி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.



    மோர்கனுக்குப் பதிலாக சாம் பில்லிங்ஸ் உலக லெவன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவருடன் தைமல் மில்ஸ், சாம் குர்ரான் ஆகியோரும் உலக லெவன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ஆகியோரும் உலக லெவன் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
    ×