search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டுவிட்"

    கர்நாடக மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாக்குரிமையை நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்து அனில் கும்ப்ளே டுவிட்டரில் பதிவு செய்த தகவல் வைரலாக பரவி வருகிறது. #KarnatakaElections2018 #AnilKumble
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் வரும் 28-ம் தேதியுடன் நிறைவடைவதால் இன்று தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி 10.6 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு காலையிலேயே சென்று வாக்கை பதிவு செய்தனர்.

    இதேபோல் கிரிக்கெட் நட்சத்திரம் அனில் கும்ப்ளேவும் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு குடும்பத்தினருடன் வந்து வாக்கினை பதிவு செய்தார்.



    வாக்குச்சாவடியில் சக வாக்காளர்களுடன் வரிசையில் காத்து நின்ற அவர் அதனை புகைப்படம் எடுத்து டுவிட்டரில் வெளியிட்டார். அதில், ‘நான் ஓட்டு போடுவதற்காக காத்திருக்கிறேன். இதேபோல் பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாக்குரிமையை நிறைவேற்ற வேண்டும்’ என கும்ப்ளே கேட்டுக்கொண்டார்.

    அவரது இந்த பதிவு வைரலாக பரவி வருகிறது. இந்த பதிவை வெளியிட்ட ஒரு மணி நேரத்திற்குள் 17 ஆயிரம் பேர் லைக் செய்தனர். 200 பேர் ரீடுவிட் செய்தனர். 11 மணியளவில் 39 ஆயிரம் பேர் லைக் செய்திருந்தனர். பின்னர் ஓட்டு போட்டுவெளியே வந்ததும் மையிட்ட விரலைக் காட்டி எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் டுவிட்டரில் பதிவிட்டார். இந்த புகைப்படமும் வேகமாக பரவி வருகிறது. #KarnatakaElections2018 #AnilKumble

    ×