search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபாடா - ஸ்மித் பிரச்சினையில் விராட் கோலியை இழுக்கும் முன்னாள் வீரர்
    X

    ரபாடா - ஸ்மித் பிரச்சினையில் விராட் கோலியை இழுக்கும் முன்னாள் வீரர்

    ரபாடா - ஸ்மித் இடையிலான மோதல் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விராட் கோலியை இழுத்துள்ளார் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர். #SAvAUS #Rabada
    தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போர்ட் எலிசபெத்தில் நடைபெற்றது. இதில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு ரபாடா முக்கிய காரணமாக இருந்தார்.

    முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டும் வீழ்த்தினார். 11 விக்கெட்டுக்கள் கைப்பற்றி ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஸ்மித்தை எல்பிடள்யூ மூலம் ரபாடா வீழ்த்தினார்.

    ஸ்மித்தை வீழ்த்திய சந்தோசத்தில் ஸ்மித்திற்கு நேராக சென்று தோளோடுதோள் மோதினார். இதனால் ஐசிசி அவருக்கு மூன்று டிமெரிட் புள்ளிகள் வழங்கியது. ஏற்கனவே ஐந்து புள்ளிகள் உள்ளதால் இரண்டு டெஸ்டில் விளையாட ரபாடாவிற்கு ஐசிசி தடைவிதித்துள்ளது.



    இதனால் கடைசி இரண்டு டெஸ்டிலும் ரபாடா விளையாடாத நிலை ஏற்பட்டுள்ளது. ஐசிசியின் இந்த முடிவிற்கு பெரும்பாலோனார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா அணிக்காக 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பால் ஹாரிஸ், இந்த பிரச்சினையில் விராட் கோலியை இழுத்துள்ளார்.

    பால் ஹாரிஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் ‘‘ஒவ்வொரு வீரர்களும் செய்ததைத்தான் ரபாடா செய்துள்ளார். தென்ஆப்பிரிக்கா - இந்தியா இடையிலான மூன்று டெஸட் போட்டிகளில் விராட் கோலி கோமாளி போன்று செயல்பட்டார். ஆனால் அவருக்கு எதிராக ஐசிசி ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.



    ஐசிசிக்கு ரபாடா அல்லது தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக பொதுவாகவே ஏதோ பிரச்சினை இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார். #SAvAUS #Rabada
    Next Story
    ×