search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் போட்டியால் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.2017 கோடி உபரி வருவாய்
    X

    ஐபிஎல் போட்டியால் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.2017 கோடி உபரி வருவாய்

    பணக்கார டி20 லீக் என அழைக்கப்படும் ஐபில் தொடரின் மூலம் வருகிற நிதியாண்டியல் உபரி வருவாயாக ரூ. 2017 கோடி லாபம் கிடைக்கும் என ஐபிஎல் கணித்துள்ளது. #IPL2018
    ஐ.பி.எல். போட்டியில் இந்திய கிரிக்கெட் வாரியம் கோடிக்கணக்கான வருவாயை பெற்று வருகிறது. 2008-ம் ஆண்டு இந்தப்போட்டி அறிமுகம் ஆனது. ஐபிஎல் போட்டியின் மூலம் கிரிக்கெட் வாரியத்துக்கு 95 சதவீத வருவாய் உபரியாக கிடைக்கிறது.

    வரும் நிதியாண்டில் ஐபிஎல் மூலம் ரூ. 2017 கோடி வருவாய் உபரியாக கிடைக்கும் என்று கிரிக்கெட் வாரியம் கணிக்கிறது. சர்வதேச போட்டிகள் மற்றும் உள்ளூர் போட்டிகள் மூலம் ரூ.125 கோடிதான் உபரியாக கிடைக்கும். 45 நாட்கள் நடைபெறும் ஐபிஎல் போட்டியில்  66 சதவீதம் உபரி வருவாயாக கிடைத்துள்ளது. அதாவது ரூ. 670 கோடி உபரியாகும். ஒளிபரப்பு உரிமம் மூலம்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு வருவாய் அதிகமாக கிடைக்கிறது. ஸ்டார் இந்தியா நிறுவனம் 5 ஆண்டு ரூ.16,347 கோடிக்கு ஒளிபரப்பு உரிமம் பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    வரும் சீசனில் 1272 கோடி ரூபாய் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் 3413 கோடி ரூபாய் வருவாய் கிடைக்க இருக்கிறது.
    Next Story
    ×