search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டி: 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
    X

    இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டி: 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

    அடிலெய்டில் நடைபெற்ற இங்கிலாந்து எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. #AUSvENG

    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டு நகரில் நடைபெற்று வருகிறது.

    முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவின் அபார பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. அந்த அணி 8 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்தது. ஜேசன் ராய், ஜோடூப், பேரிஸ்டோவ், ஜோஸ் பட்லரி ஆகிய 4 பேர் ரன் எதுவும் எடுக்காமல் ‘டக்’ அவுட் ஆனார்கள்.

    இதையடுத்து, களமிறங்கிய கிரிஸ் வோக்ஸ் அபாரமாக விளையாடி அணிக்கு 78 ரன்கள் பெற்று தந்தார். மோர்கன் மற்றும் மோயன் அலி தலா 33 ரன்கள் எடுத்தனர். டாம் கூரன் 35 ரன்களும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இங்கிலாந்து அணி 44.5 ஓவருக்கு 196 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் கம்மின்ஸ் 4 விக்கெட்களும், ஹசில்வுட், அண்ட்ரூ டை தலா மூன்று விக்கெட்களும் வீழ்த்தினர்.



    அதைத்தொடர்ந்து 197 ரன்கள் என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். வார்னர் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து வந்த கெமரான் ஒயிட் 3 ரன்னிலும், ஸ்மித் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் ஹெட் உடன் மிச்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினார். ஹெட் அரைசதம் அடிக்க, மார்ஷ் 32 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அவரைத்தொடர்ந்து வந்த மார்கஸ் ஸ்டாயின்ஸ் 14 ரன்களிலும், தொடக்க ஆட்டக்காரர் ஹெட் 96 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியா அணி 37 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டிம் பெய்ன் 25 ரன்களுடன் களத்தில் இருந்தார். 



    இங்கிலாந்து அணி பந்துவீச்சில் அடில் ரஷித் 3 விக்கெட்களும், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், டாம் குர்ரன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். ஆஸ்திரேலியா அணியின் பாட் கம்மின்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

    ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி ஏற்கனேவே தொடரை கைப்பற்றி உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி இப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கிடையேயான கடைசி ஒருநாள் போட்டி 28-ம் தேதி நடைபெற உள்ளது. #AUSvENG
    Next Story
    ×