search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோலி விக்கெட் தான் எங்களது இலக்கு: தென் ஆப்பிரிக்க வீரர் பிலாண்டர்
    X

    கோலி விக்கெட் தான் எங்களது இலக்கு: தென் ஆப்பிரிக்க வீரர் பிலாண்டர்

    இந்திய கேப்டன் விராட் கோலியின் விக்கெட் தான் எங்களது இலக்காக இருந்தது என்று தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் பிலாண்டர் கூறியுள்ளார். #SAvIND #ViratKohli #philander
    கேப்டவுன்:

    தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் பிலாண்டர்.

    கேப்டவுனில் நடந்த முதல் டெஸ்டில் அவர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக திகழ்ந்தார். அவரது பந்தை எதிர் கொள்ள முடியாமல் இந்திய வீரர்கள் திணறினார்கள். அவர் 6 விக்கெட் வீழ்த்தி தென் ஆப்பிரிக்க வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

    இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலிதான் எங்களது இலக்காக இருந்தது என்று பிலாண்டர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    விராட்கோலி மிகவும் அருமையான அதிரடி ஆட்டக்காரர். அவரை வீழ்த்துவதுதான் எங்களது இலக்காக இருந்தது. விராட்கோலியை தொடக்கத்திலேயே அவுட் செய்து விட்டால் எங்களுக்கு வெற்றி எளிது என்று கணித்தோம்.

    அதன்படியே இரண்டு இன்னிங்சிலும் அவரை விரைவில் அவுட் செய்தோம். விராட் கோலிக்கு தொடர்ந்து ‘அவுட் - சுவிங்கர் பந்து களையே வீசினேன். அதில் ஒரு பந்தில் அவர் சிக்கி விட்டார்.



    இவ்வாறு பிலாண்டர் கூறினார்.

    கேப்டவுன் டெஸ்டில் பிலாண்டர் முதல் இன்னிங்சில் முரளிவிஜய், புஜாரா, அஸ்வின் ஆகியோரையும் (3விக்கெட்), 2-வது இன்னிங்சில் முரளிவிஜய், வீராட்கோலி, ரோகித்சர்மா, அஸ்வின், முகமதுசமி, பும்ரா ஆகியோரையும் (6 விக்கெட்) அவுட் செய்தார். இந்த டெஸ்டில் மொத்தம் 9 விக்கெட் வீழ்த்தி இந்தியாவின் சரிவுக்கு முக்கிய பங்கு வகித்தார்.

    32 வயதான பிலாண்டர் 48 டெஸ்டில் விளையாடி 182 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அவர் 42 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியதே சிறந்த பந்து வீச்சாகும்.
    Next Story
    ×