search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட்: இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி
    X

    மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட்: இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி

    இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 270 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    லண்டன்:

    மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், ஒரு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் கடந்த 17-ம் தேதி தொடங்கியது. 

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 514 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 

    தொடர்ந்து, மேற்கிந்திய தீவுகள் பேட்டிங் செய்தது. இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் ஒரு விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்திருந்தது. கைல் ஹோப் 25 ரன்களுடனும், கைரன் பவல் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று, தொடர்ந்து விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணியினர், இங்கிலாந்து பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் விக்கெட்களை இழந்து தடுமாறியது. முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் 168 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் ஜெர்மைன் பிளாக்வுட் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 346 ரன்கள் முன்னிலை பெற்றது.

    பாலோ-ஆன் பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் கிரேக் பிரத்வெயிட் 40 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் ரன் எடுக்க தடுமாறினர். இந்த முறையும் இங்கிலாந்து அணியிரின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் தொடர்ந்து ஆட்டமிழந்தனர். மேற்கிந்திய தீவுகள் இரண்டாம் இன்னிங்சில் 137 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால், இந்த பகலிரவு டெஸ்ட் போட்டி மூன்று நாள்களில் நிறைவடைந்தது.

    இங்கிலாந்து அணி 270 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான அடுத்த போட்டி 25-ம் தேதி தொடங்குகிறது.

    Next Story
    ×