search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகின் பல்வேறு பகுதிகளில் பேஸ்புக் வலைத்தளம் முடங்கியதால் அதிர்ச்சி
    X

    உலகின் பல்வேறு பகுதிகளில் பேஸ்புக் வலைத்தளம் முடங்கியதால் அதிர்ச்சி

    உலகின் பல்வேறு பகுதிகளில் நேற்று சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் முடங்கியதால் பயனாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. #Facebook #WhatsApp #Instagram
    புதுடெல்லி:

    பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் இன்று அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்று இருக்கின்றன. இத்தகைய ஊடகங்களில் நாள்தோறும் மணிக்கணக்கில் நேரம் செலவிடும் இளைய தலைமுறையினர் ஏராளம். அப்படி சமூக ஊடகங்களில் ஒன்றிப்போனவர்களுக்கு, அவற்றின் முடக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விடும். அப்படி ஒரு நிகழ்வு நேற்றும் நடந்து விட்டது.

    விடுமுறை தினமான நேற்று காலையில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் முடங்கி விட்டன. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் ஒரே நேரத்தில் இந்த செயலிழப்பு நிகழ்ந்தது.

    இந்த நேரத்தில் வலைத்தள பயனாளர்களால் தங்கள் கணக்குகளை பயன்படுத்த முடியவில்லை. இதனால் பயனாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. எனினும் சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு இந்த முடக்கம் படிப்படியாக சீரடைந்தது. அதன்பிறகே அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    முன்னதாக கடந்த மார்ச் மாதத்தில் ஒருமுறை இதுபோல ஏற்பட்ட செயலிழப்பு சீரடைய 24 மணி நேரம் வரை எடுத்தது குறிப்பிடத்தக்கது.   #Facebook #WhatsApp #Instagram 
    Next Story
    ×