search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா
    X

    குஜராத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா

    குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜவஹர் சாவ்டா தனது பதவியை ராஜினாமா செய்ததுடன் கட்சியை விட்டும் விலகி பாஜகவில் சேர்ந்தார். #GujaratMLA #CongressMLA #JawaharChavda
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 99 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. 77 தொகுதிகளில் வெற்றி அடைந்த காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ளது.
     
    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மனவ்தார் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜவஹர் சாவ்டா இன்று தனது பதவியை ராஜினாமா செய்ததுடன் கட்சியை விட்டும் விலகினார்.



    இதுதொடர்பாக, குஜராத் மாநில சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி கூறுகையில், சாவ்டா தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். எனது வீட்டுக்கு வந்த அவர், தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளப்பட்டது என தெரிவித்துள்ளார்.

    காங்கிரசில் இருந்து விலகிய ஜவஹர் சாவ்டா, பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மூன்றாவது எம்.எல்.ஏ. இவர் என்பது குறிப்பிடத்தக்கது. #GujaratMLA #CongressMLA #JawaharChavda
    Next Story
    ×