search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வெளியீடு
    X

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வெளியீடு

    திருமலை - திருப்பதி தேவஸ்தானம் வருகிற மே மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை வெளியிட்டுள்ளது. #Tirupati
    திருமலை:

    திருமலை - திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதே போல், வருகிற மே மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டு உள்ளது. பக்தர்கள் 3 மாதங்களுக்கு முன்பாகவே ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளும் வகையில், இந்த ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது.

    இந்த நிலையில் மே மாதத்துக்கான 70 ஆயிரத்து 786 ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை தேவஸ்தான இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது. அதில், பக்தர்கள் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என திருமலை - திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    வெளியிடப்பட்டுள்ள ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் விவரம் வருமாறு:-

    அஷ்டதல பாத பத்மாராதனை சேவை 240

    சகஸ்ர தீப அலங்கார சேவை 16,200

    மேற்கண்ட ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளில் சுப்ர பாதம், தோமாலா, அர்ச்சனை, அஷ்டதல பாத பத்மாராதனை சேவை, நிஜபாத சேவை ஆகியவைகளில் பக்தர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யலாம். அந்த பக்தர்களுக்கு குலுக்கல் முறையில் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும்.

    மேலும் விசே‌ஷ பூஜை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்த உற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை ஆகியவைகளில் வழக்கம்போல் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யலாம். இந்த டிக்கெட்டுகளுக்கு குலுக்கல் முறை கிடையாது. #Tirupati
    Next Story
    ×