search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arjitha seva"

    ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அனைத்து ஆர்ஜித சேவைகள், திவ்ய தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது. #Tirupati #NewYear2019
    ஆங்கில புத்தாண்டு ஆங்கிலேயர்களுக்கானது. யுகாதி எனப்படும் தெலுங்கு புத்தாண்டையே தெலுங்கு பேசும் மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் எனக்கூறி, ஆந்திராவில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான சிறப்பு முன்னேற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டாம் என ஆந்திர அரசு அறநிலையத்துறை 2 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டது.

    அதன்படி, 2019 ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் சாதாரண பக்தர்களை கோவிலில் சாமி தரிசனத்துக்கு எப்படி அனுமதித்தோமோ அதேபோல், 2019 ஆங்கில புத்தாண்டு தினத்திலும் பக்தர்களை கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க உள்ளோம், எனத் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இன்றும் (திங்கட்கிழமை), நாளை (செவ்வாய்க்கிழமை) இரு நாட்கள் ஏழுமலையான் கோவிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இலவச தரிசன பக்தர்களுக்கான டைம் ஸ்லாட் கார்டு வழங்குவது, அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகள் வழியாக நடந்து வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கான அனுமதி சீட்டு வழங்குவது, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், ஒரு வருட கைக்குழந்தையோடு வரும் பெண் பக்தர்கள் ஆகியோருக்கான தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இன்று 300 ரூபாய் கட்டண பிரத்யேக பிரவேச தரிசனத்தில் 7 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. நாளை (செவ்வாய்க்கிழமை), நாளை மறுநாள் (புதன்கிழமை) சாதாரண பக்தர்கள் இலவச தரிசனத்தில் எப்போதும் போலவே ஏழுமலையானை வழிபட அனுமதிக்கப்படுகிறார்கள்.

    வைகுண்ட ஏகாதசியையொட்டி தரிசன நடைமுறைகள் எப்படி பின்பற்றப்பட்டதோ, அதேபோல் 2019 ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி பக்தர்களுக்கான தரிசன நடைமுறை பின்பற்றப்படுகிறது. நாளை வி.ஐ.பி. புரோட்டோக்கால் பக்தர்கள் குறைந்த எண்ணிக்கையில் 500 பேர் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். சிபாரிசு கடிதங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

    ஆங்கில புத்தாண்டையொட்டி நள்ளிரவு 1 மணியளவில் கோவிலின் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணியளவில் மார்கழி மாத பூஜைகள் நடக்கின்றன. 1.30 மணியில் இருந்து அதிகாலை 4 மணிவரை வி.ஐ.பி. புரோட்டோக்கால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.30 மணியளவில் இருந்து மறுநாள் நள்ளிரவு 1 மணிவரை இலவச தரிசனத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்களுக்கு உணவு, குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.#Tirupati #NewYear2019
    திருப்பதியில் முறைகேடாக ஆர்ஜித சேவா டிக்கெட் பெற்று தரிசனத்துக்கு வந்த 2 பக்தர்களிடம் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tirupati #ArjithaSeva
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையானை நேற்று காலை சுப்ரபாத சேவையில் தரிசிக்க 2 பக்தர்கள் வந்தனர். அவர்களிடம் உள்ள டிக்கெட்டை ஸ்கேன் செய்த போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து, அந்த பக்தர்களின் ஆதார் அட்டையை பெற்றுக் கொண்டு, அவர்களை தனியே அழைத்து விசாரணை நடத்தினர். அவர்கள் ஆந்திர மாநிலம் ஓங்கோலைச் சேர்ந்த ராஜூ என்ற இடைத்தரகர் மூலம் சுப்ரபாத டிக்கெட்டை ரூ.2000 அளித்து வாங்கியது தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தற்போது இணையதளம் வாயிலாக தேவஸ்தானம் வெளியிடும் டிக்கெட்டுகளை இடைத்தரகர்கள் பல்வேறு பெயர்களில் பெற்று அதிக விலைக்கு பக்தர்களுக்கு விற்று வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக அந்த முறைகேட்டில் ஈடுபட்டு வரும் பலரை தேவஸ்தான கண்காணிப்பு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  #Tirupati #ArjithaSeva
     
    ×