search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏர் இந்தியா கடனை அடைக்க ரூ.3,900 கோடி ஒதுக்கீடு
    X

    ஏர் இந்தியா கடனை அடைக்க ரூ.3,900 கோடி ஒதுக்கீடு

    55 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கி திண்டாடும் ஏர் இந்தியா நிறுவனத்தின் கடனை அடைக்க பட்ஜெட்டில் 3,900 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. #Governmentallocate #AirIndiadebt #AirIndia
    புதுடெல்லி:

    தனியார் விமானச்சேவை நிறுவனங்களின் தொழில் போட்டி மற்றும் கடன்களுக்கான வட்டி போன்றவற்றால் ஏர் இந்தியா நிறுவனம் சுமார் 55 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது.

    கடந்த 2007-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் ஏர் இந்தியா இணைக்கப்பட்ட பின்னர் இந்த நிதி தள்ளாட்டம் ஏற்பட்டது. முந்தையை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் சிறப்பு நிதி தொகுப்பு அளிக்கப்பட்டும் கடன் சுமையில் இருந்து மீள முடியாமல் ஏர் இந்தியா நிறுவனம் திண்டாடி வருகிறது.

    இந்நிலையில், இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் ஏர் இந்தியா நிறுவனத்தின் கடனை அடைக்க 3,900 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ஏர் இந்தியா நிறுவனத்தின் நிதியாதாரத்தை கட்டமைக்க ஏர் இந்தியா அஸ்ஸெட் ஹோல்டிங் என்ற அமைப்பு உருவாக்கப்படும். ஒதுக்கீடு செய்யப்பட்ட 3,900 கோடி ரூபாயில் 1300 கோடி ரூபாய் இந்த ஆண்டில் செலுத்தப்படும். அடுத்த நிதியாண்டில் 2600 கோடி ரூபாய் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #Governmentallocate #AirIndiadebt #AirIndia
    Next Story
    ×