search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனவரியில் நடைபெறவுள்ள மெகா பேரணி முக்கிய திருப்புமுனையாக இருக்கும் - மம்தா பானர்ஜி
    X

    ஜனவரியில் நடைபெறவுள்ள மெகா பேரணி முக்கிய திருப்புமுனையாக இருக்கும் - மம்தா பானர்ஜி

    அடுத்த ஆண்டு ஜனவரி 19ம் தேதி நடைபெறவுள்ள மெகா பேரணி முக்கிய திருப்பு முனையாக இருக்கும் என மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். #MamataBanarjee #BrigadeRally
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் மம்தா பானர்ஜி. மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி அடுத்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி கொல்கத்தாவில் மெகா பேரணி நடத்த ஏற்பாடு செய்துள்ளார். இதில் இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

    இதற்காக அவர் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து பேரணியில் பங்கேற்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்.

    இந்நிலையில், கொல்கத்தாவில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் மம்தா பானர்ஜி இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், அடுத்த ஆண்டு ஜனவரி 19ம் தேதி நடைபெறவுள்ள மெகா பேரணி முக்கிய திருப்பு முனையாக இருக்கும் என தெரிவித்தார்.

    மேலும், மெகா பேரணிக்கான ஏற்பாடுகளை விரைந்து முடிக்கும்படி கட்சி நிர்வாகிகளிடம் அவர் கேட்டுக் கொண்டார். #MamataBanarjee #BrigadeRally
    Next Story
    ×