search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசுடன் மோதல்: பிரதமர் மோடியுடன் ரிசர்வ் வங்கி கவர்னர் சந்திப்பு
    X

    மத்திய அரசுடன் மோதல்: பிரதமர் மோடியுடன் ரிசர்வ் வங்கி கவர்னர் சந்திப்பு

    மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கி கவர்னருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் பிரதமர் மோடியை ரிசர்வ் வங்கி கவர்னர் சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. #RBI #PMModi #UrjitPatel
    புதுடெல்லி:

    மத்திய நிதி அமைச்சகத்துக்கும் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    ரிசர்வ் வங்கி தன்னாட்சி அதிகாரம் கொண்டது. அந்த அதிகாரத்துக்கு சவால் விடும் வகையில் ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதி அமைச்சகம் சமீபத்தில் 3 கோரிக்கைகளை வைத்தது.

    நிதிபற்றாக்குறையை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தனது கையிருப்பு பணத்தின் பெரும்பகுதியை மத்திய அரசுக்கு மாற்ற வேண்டும் என்பது அதில் ஒரு கோரிக்கை ஆகும். இதற்கு ரிசர்வ் வங்கி உடன்படவில்லை.

    இந்த மோதல் வெளிப்படையாக தெரிந்த நிலையில் வருகிற 19-ந்தேதி நடைபெறும் வாரிய கூட்டத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் ராஜினாமா செய்யலாம் என்ற தகவல் வெளியானது. இதை நிதி அமைச்சகம் மறுத்திருந்தது.

    இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடியை ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 9-ந்தேதி இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. நாட்டின் பொருளாதார நிலை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

    மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கி கவர்னருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. #RBI #PMModi #UrjitPatel
    Next Story
    ×