search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் 7 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்- சப்-இன்ஸ்பெக்டர் பலி
    X

    சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் 7 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்- சப்-இன்ஸ்பெக்டர் பலி

    சத்தீஸ்கரில் நாளை முதற்கட்ட தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மாவோயிஸ்டுகள் இன்று தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள். #Chhattisgarh
    ராய்ப்பூர், நவ. 11-

    90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் முதல் கட்டமாக 18 தொகுதிகளுக்கு நாளையும், 2-வது கட்டமாக 72 தொகுதிக்கு 20-ந்தேதியும் தேர்தல் நடக்கிறது.

    நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் சத்தீஸ்கரில் இன்று மாவோயிஸ்டுகள் 7 இடங்களில் வெடிகுண்டு வீசி அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

    கான்கர் மாவட்டத்தில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் எல்லை பாதுகாப்புப்படை சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரசிங் காயம் அடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காட்கல்- கோம் கிராமத்துக்கு இடையே உள்ள காட்டுப் பகுதியில் மாவோயிடுஸ்கள் வெடிகுண்டுகளை வீசி தாக்கினர்.



    பிஜப்பூர் பகுதியில் பாதுகாப்பு படைவீரர்களுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கி சண்டையில் மாவோயிஸ்டு ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனிடம் இருந்து ஆயுதங்கள், வெடி பொருட்கள் கைப்பற்றப் பட்டன.

    இதன் காரணமாக சத்தீஸ்கரின் பல பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. தேர்தலை புறக்கணிக்க மாவோயிஸ்டுகள் ஏற்கனவே அழைப்பு விடுத்து இருந்தனர். கடந்த 15 தினங்களில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடத்தப்பட்ட 4-வது வெடிகுண்டு தாக்குதல் இதுவாகும். இதில் 13 பேரும் பலியாகி இருந்தனர்.
    Next Story
    ×