search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக கேள்வி எழுப்பிய அதிகாரிக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டதா? - நிர்மலா சீத்தாராமன் விளக்கம்
    X

    ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக கேள்வி எழுப்பிய அதிகாரிக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டதா? - நிர்மலா சீத்தாராமன் விளக்கம்

    ரபேல் போர் விமானங்களின் விலை குறித்து ஆட்சேபனை தெரிவித்த அதிகாரி கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டதாக வெளியான தகவலுக்கு ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்து உள்ளார். #RahulGandhi #Modi #RafaleDeal #NirmalaSitharaman
    புதுடெல்லி :

    இந்தியாவுக்கு போர் விமானங்கள் வாங்குவது குறித்து மோடி அரசு பிரான்ஸ் நாட்டுடன் போட்டுக்கொண்ட ரபேல் ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. அந்த குற்றச்சாட்டு வலுசேர்க்கும் வகையில், பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஹோலண்டே, ரபேல் ஒப்பந்தத்தில் அம்பானி குழுமத்தை இணைத்தது இந்திய அரசின் வற்புறுத்தலினால்தான் என தெரிவித்ததாக வெளியான செய்தி அமைந்தது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தாலும் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சை தொடர்ந்து வருகிறது.

    இந்த விவகாரத்தில் தொடர்ந்து மோடி அரசை காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக கேள்வி எழுப்பிய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு ஒரு மாத விடுமுறை அளித்துவிட்டு, ஒப்பந்தத்தை கையெழுத்திட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதற்கான ஆதாரமாக ஒரு செய்தி நிறுவனத்தின் செய்தியை குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், அரசை எதிர்ப்பவர்கள் குறிவைத்து நீக்கப்படுவதும், ஆதரிப்பவர்களுக்கு சன்மானமும் வழங்கப்படுவதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

    இந்நிலையில், இதுகுறித்து ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் ஒரு செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

    பேச்சுவார்த்தை நடத்தும்போது, அதில் ஈடுபடும் அதிகாரிகளிடையே கருத்து மாறுபாடுகள் எழுவது இயற்கைதான். சம்பந்தப்பட்ட அதிகாரியின் மாறுபட்ட கருத்து, பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    அதன்பிறகு, கூட்டு முடிவு எடுக்கப்பட்டது. மத்திய மந்திரிசபையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட இறுதி குறிப்பில் அந்த அதிகாரியும் கையெழுத்து போட்டுள்ளார். அதை ஏற்றுத்தான், மந்திரிசபை கூட்டத்தில், இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    மேலும், அதிருப்தி தெரிவித்த அதிகாரி ராஜீவ் வர்மா, விடுமுறையில் அனுப்பப்பட்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. அது தவறான தகவல். அவர் முன்கூட்டியே திட்டமிட்டபடி, வெளிநாட்டுக்கு பயிற்சிக்காக சென்றார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #RahulGandhi #Modi #RafaleDeal #NirmalaSitharaman
    Next Story
    ×