search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடி அரசை பற்றி கேள்வி எழுப்ப ராகுலுக்கு எந்த உரிமையும் கிடையாது - அமித் ஷா
    X

    மோடி அரசை பற்றி கேள்வி எழுப்ப ராகுலுக்கு எந்த உரிமையும் கிடையாது - அமித் ஷா

    பிரதமர் மோடியின் ஆட்சியை பற்றி கேள்வி எழுப்புவதற்கு ராகுல் காந்திக்கு எந்த உரிமையும் கிடையாது என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். #AmitShah #RahulGandhi
    ராய்ப்பூர்:

    பாஜக தேசிய தலைவர் அமித் ஷா சட்டசபை தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, சத்தீஸ்கர் மாநிலத்தில் தற்போது பிரச்சாரம் செய்து வருகிறார். 

    சத்தீஸ்கர் மாநிலத்தின்  குருபத் கிராமத்தில் உள்ள பிரயாககிரி மைதானத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    கடந்த 60 ஆண்டு காலமாக காங்கிரசார் இந்தியாவை ஆட்சி செய்து வந்துள்ளனர். அப்பொழுது கிராமங்களுக்கு ஏன் மின்சார வசதி கிடைக்கவில்லை? விவசாயிகளுக்கு பயனளிக்க கூடிய கொள்முதல் விலை ஏன் கிடைக்கவில்லை?

    இந்தியாவை ஆட்சி செய்த 60 ஆண்டுகளின் கணக்குகளை காட்டவேண்டும் என மக்கள் உங்களிடம் எதிர்பார்க்கின்றனர். நீங்கள் பிரதமர் மோடியின் 4 ஆண்டு கால ஆட்சி குறித்து கணக்கு கேட்கிறீர்கள். உங்களுக்கு மோடி ஆட்சி பற்றி கேள்வி கேட்க எந்த உரிமையும் கிடையாது என தெரிவித்தார்.

    இந்த ஆண்டு இறுதியில், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. #AmitShah #RahulGandhi
    Next Story
    ×