search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - ராகுல் வலியுறுத்தல்
    X

    கேரள மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - ராகுல் வலியுறுத்தல்

    கேரளாவின் பேரழிவை ஏற்படுத்தி உள்ள மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். #KeralaFloods #RahulGandhi #NationalDisaster
    புதுடெல்லி:

    கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு பருவமழை பெய்துள்ளது. கடந்த மே மாதம் 29-ந் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த 8-ந் தேதி முதல் தீவிரமடைந்துள்ளதால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

    அணைகளில் இருந்து திறந்து விடப்படும் அதிகப்படியான உபரிநீர், தாழ்வான பகுதிகளை சூழ்ந்து வெள்ளக்காடாக்கி இருக்கிறது. இடுக்கி, வயநாடு, மலப்புரம் போன்ற மலைப்பாங்கான மாவட்டங்களில் தொடர்ந்து ஏற்படும் நிலச்சரிவால், எங்கு பார்த்தாலும் சேறும் சகதியுமாகவே காணப்படுகிறது. கடந்த 8-ந் தேதி முதல் கேரளாவில் பேரழிவை ஏற்படுத்தி உள்ள இரண்டாம் கட்ட பருவமழைக்கு இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளனர்.



    முப்படையைச் சேர்ந்த வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.  பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று நேரில் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி,  கேரளாவுக்கு இடைக்கால நிவாரண நிதியாக 500  கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், கேரள மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

    ‘கேரள மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக தாமதம் இன்றி அறிவிக்க வேண்டும். லட்சக்கணக்கான மக்களின் வாழ்வு, வாழ்வாதாரம் மற்றும் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது” என்று ராகுல் டுவிட் செய்துள்ளார்.  #KeralaFloods #RahulGandhi #NationalDisaster
    Next Story
    ×