search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊழல்வாதிகளுக்கும் கருப்பு பணம் வைத்திருப்போருக்கும் மன்னிப்பே கிடையாது- மோடி
    X

    ஊழல்வாதிகளுக்கும் கருப்பு பணம் வைத்திருப்போருக்கும் மன்னிப்பே கிடையாது- மோடி

    ஊழல்வாதிகளுக்கும் கருப்பு பணம் வைத்திருப்போருக்கும் மன்னிப்பே கிடையாது என சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார். #IndependenceDayIndia #PMModi
    புதுடெல்லி:

    நாட்டின் 72-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது, மத்திய பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள் மற்றும் நாட்டின் வளர்ச்சி குறித்து பேசினார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    ஊழல்வாதிகளுக்கும் கருப்புப் பணம் வைத்திருப்போருக்கும் மன்னிப்பே கிடையாது. அவர்கள் நாட்டை நாசமாக்கி உள்ளனர். ஊழல்வாதிகள் மற்றும் கறுப்பு பணம் வைத்திருப்போரை தண்டிப்பதில் அரசு உறுதியாக உள்ளது. அரசு உதவியை சட்டப்புறம்பாக பெற்று வந்த 6 கோடி பேர் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளனர். நலத்திட்ட உதவிக்கான ரூ.90,000 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.

    REFORM, PERFORM, TRANSFORM (சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம்) இதுவே மத்திய அரசின் தாரக மந்திரம். நேர்மையாக வரி செலுத்துவோரால்தான் நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அவர்களின் வரிப்பணம் மக்கள் நலனுக்கே செலவிடப்படும். வாரிசு அரசியலை மத்திய அரசு ஒழித்துள்ளது. வரி செலுத்தும் ஒவ்வொரு வரும் ஏழைக் குடும்பங்கள் வயிறார சாப்பிட உதவுகிறார்கள்.

    பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்களின் உரிமையை காப்பதில் இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என குழந்தைகளுக்கு பெற்றோர் கற்றுக்கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #IndependenceDayIndia #Modi #PMModi
    Next Story
    ×