search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற விவாதத்தில் பிரச்சார பாணியில் பதிலடி கொடுக்கிறார் மோடி
    X

    பாராளுமன்ற விவாதத்தில் பிரச்சார பாணியில் பதிலடி கொடுக்கிறார் மோடி

    பாராளுமன்றத்தில் இன்று நடைபெற உள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் மோடி தனது பிரச்சார பாணியில் உரையாற்ற உள்ளார். #MonsoonSession #ModiInDebate
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் மத்திய அரசின் மீது  நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. தெலுங்கு தேசம் கட்சி சார்பிலும் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. தெலுங்கு தேசம் அளித்த நோட்டீசை சபாநாயகர் ஏற்றுக்கொண்டு அனுமதி அளித்துள்ளார். இந்த மசோதா மீது இன்று விவாதம் நடக்க உள்ளது.



    நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து அவையில் பேச பா.ஜ.க உள்பட எதிர்கட்சிகளுக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காலை 11 மணிக்கு விவாதம் தொடங்கி மாலை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விவாதத்தின்போது எதிர்க்கட்சிகள் சார்பில் மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில் பல்வேறு விவகாரங்கள் எடுத்துரைக்கப்படும். குறிப்பாக பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் தாக்குதல்கள், பா.ஜ.க. அளித்த வாக்குறுதிகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் குறித்து உறுப்பினர்கள் காரசாரமாக பேசுவார்கள்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜ.க.  பேச உள்ளது. இதில்  காங்கிரஸ் தலைவர் கூறிய இந்து பாகிஸ்தான் கருத்து மற்றும் சகிப்புத்தன்மையின்மை தொடர்பான விஷயங்களை முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவாதத்தின் இறுதியில், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கள் மற்றும் விமர்சனங்களுக்கு வலுவான பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

    இந்த விவாதத்தை மோடி சரியாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்கும் வகையில், தனது வழக்கமான பிரச்சார பாணியில் பதிலடி கொடுக்க வேண்டும் என பா.ஜ.க. எதிர்பார்க்கிறது.  #MonsoonSession #ModiInDebate
    Next Story
    ×