என் மலர்
நீங்கள் தேடியது "No Trust Vote"
- மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளுக்கும், தன்கருக்கும் இடையே தினமும் மோதல் ஏற்பட்டது.
- எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவருக்கு எதிராக கடந்த 10-ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
புதுடெல்லி:
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் மாநிலங்களவை அவைத்தலைவராக இருந்து வருகிறார். நடப்பு கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளுக்கும், தன்கருக்கும் இடையே தினமும் மோதல் ஏற்பட்டது.
அதானி விவகாரம் குறித்து அவையில் எழுப்ப எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கும் அவர், அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரசுக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையேயான தொடர்பு குறித்த குற்றச்சாட்டை எழுப்ப ஆளும் கட்சியினருக்கு அனுமதி அளித்தார். இது எதிர்க்கட்சிகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மாநிலங்களவை தலைவர் ஆளும் கட்சியின் செய்தி தொடர்பாளர்போல செயல்படுகிறார், ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார் என குற்றம் சாட்டிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள், அவருக்கு எதிராக கடந்த 10-ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர்.
இதன்மூலம் மாநிலங்களவை வரலாற்றில் முதல் முறையாக அவைத்தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்தத் தீர்மானத்தின் தொடர்பான முடிவை மாநிலங்களவை பொதுச்செயலாளர் சமீபத்தில் அவையில் தாக்கல் செய்தார். அதன்படி, ஜெகதீப் தன்கருக்கு எதிரான எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நாராயண்சிங் நிராகரித்தார் என தெரிவித்தார்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பெண் பத்திரிகையாளர்களுடன் துணை ஜனாதிபதி ஜெகதீர் தன்கர் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:
என் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஆபரேஷன் செய்ய காய்கறி வெட்டும் கத்தியைப் பயன்படுத்துவது போன்றது.
அந்த நோட்டீஸ், காய்கறி வெட்டும் கத்தி கூட இல்லை. துருப்பிடித்தது. அவசரம் இருந்தது. அதைப் படித்ததும் வியந்து போனேன்.
என்னை மேலும் ஆச்சரியப்படுத்தியது என்னவென்றால், நீங்கள் யாரும் அதைப் படிக்கவில்லை. படித்திருந்தால் நீங்கள் தூங்காமல் இருந்திருப்பீர்கள்.
உங்கள் குரல் நாண்களைப் பயன்படுத்துவதற்கு முன், உங்கள் காதுகள் மற்ற பார்வையை மகிழ்விக்க அனுமதிக்கவும். இந்த இரண்டு கூறுகள் இல்லாமல் ஜனநாயகத்தை வளர்க்கவோ, மலர வைக்கவோ முடியாது என தெரிவித்தார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து அவையில் பேச பா.ஜ.க உள்பட எதிர்கட்சிகளுக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காலை 11 மணிக்கு விவாதம் தொடங்கி மாலை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விவாதத்தின்போது எதிர்க்கட்சிகள் சார்பில் மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில் பல்வேறு விவகாரங்கள் எடுத்துரைக்கப்படும். குறிப்பாக பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் தாக்குதல்கள், பா.ஜ.க. அளித்த வாக்குறுதிகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் குறித்து உறுப்பினர்கள் காரசாரமாக பேசுவார்கள்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜ.க. பேச உள்ளது. இதில் காங்கிரஸ் தலைவர் கூறிய இந்து பாகிஸ்தான் கருத்து மற்றும் சகிப்புத்தன்மையின்மை தொடர்பான விஷயங்களை முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவாதத்தின் இறுதியில், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கள் மற்றும் விமர்சனங்களுக்கு வலுவான பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
இந்த விவாதத்தை மோடி சரியாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்கும் வகையில், தனது வழக்கமான பிரச்சார பாணியில் பதிலடி கொடுக்க வேண்டும் என பா.ஜ.க. எதிர்பார்க்கிறது. #MonsoonSession #ModiInDebate






