search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல்காந்திக்கு குழந்தைகள் உரிமை ஆணையம் நோட்டீஸ்
    X

    ராகுல்காந்திக்கு குழந்தைகள் உரிமை ஆணையம் நோட்டீஸ்

    தலித் சிறுவர்கள் தாக்கப்படும் வீடியோவை ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு குழந்தைகள் உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #RahulGandhi #DalitVideo
    மும்பை:

    மராட்டிய மாநிலம் ஜல்காவ் மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான கிணற்றில் தலித் சிறுவர்கள் 2 பேர் குளித்தது தொடர்பாக கிணற்றின் உரிமையாளர்கள், சிறுவர்களை நிர்வாணப்படுத்தி தாக்கினர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    தலித் சிறுவர்கள் தாக்கப்படும் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பதிவிட்டார். இதற்கு அரசியல் கட்சியினர் கடும் விமர்சனம் செய்தனர்.

    இதற்கிடையே மும்பையை சேர்ந்த சமூக ஆர்வலர், தலித் சிறுவர்கள் தாக்கப்பட்ட வீடியோவை ராகுல்காந்தி டுவிட்டரில் பதிவிட்டு அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தியதாக குற்றம்சாட்டி குழந்தைகள் உரிமைபாதுகாப்பு ஆணையத்தில் புகார் செய்தார்.

    இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு குழந்தைகள் உரிமை ஆணையம் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் டுவிட்டர் நிறுவனத்துக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 
    Next Story
    ×