search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகை ஆசிரியர் அரசிடம் கூடுதல் பாதுகாப்பு கேட்டிருந்தார் - முன்னாள் உளவுத்துறை தலைவர்
    X

    சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகை ஆசிரியர் அரசிடம் கூடுதல் பாதுகாப்பு கேட்டிருந்தார் - முன்னாள் உளவுத்துறை தலைவர்

    காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகை ஆசிரியர் சுஜாத் புகாரி, சமீபத்தில் கூடுதல் பாதுகாப்பு அளிக்குமாறு அரசிடம் கேட்டிருந்ததாக முன்னாள் உளவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார். #Bukharikilling #RisingKashmir #ShujaatBukhari

    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள ‘ரைசிங் காஷ்மீர்’ என்ற பத்திரிகையின் ஆசிரியரான சுஜாத் புகாரி (வயது 50), கடந்த 14-ம் தேதி தனது காரில் சென்று கொண்டிருந்த போது, மர்மநபர்கள் சிலர் அவரது கார் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் சுஜாத் புகாரியும், அவருடைய பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மற்றொரு பாதுகாப்பு அதிகாரி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

    பத்திரிகை ஆசிரியர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்-மந்திரி மெகபூபா முப்தி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட பல தலைவர்கள் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.


    சுட்டுக்கொல்லப்பட்ட  சுஜாத் புகாரி

    இதனிடையே காஷ்மீரில் பத்திரிகை ஆசிரியர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கு முக்கிய பங்கு இருப்பதாக மத்திய அரசு குற்றம் சாட்டி உள்ளது.

    இந்நிலையில், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் தனக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்குமாறு சுஜாத் புகாரி காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி கடந்த சில நாட்களுக்கு முன்னர் நேரில் சந்தித்து கேட்டிருந்ததாக இந்திய உளவுத்துறையின் (RAW) முன்னாள் தலைவர் ஏ.எஸ்.துலாட் தெரிவித்துள்ளார். #Bukharikilling #Srinagar #RisingKashmir #ShujaatBukhari
    Next Story
    ×