search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகத்தில் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ மாயம் - மோடியின் பிடியில் உள்ளதாக தகவல்
    X

    கர்நாடகத்தில் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ மாயம் - மோடியின் பிடியில் உள்ளதாக தகவல்

    கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க.வின் குதிரை பேரம் தொடங்கியிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. மோடியின் பிடியில் இருப்பதாக காங்கிரஸ் எம்.பி. கூறியுள்ளார். #KarnatakaElection #CongressMLAMissing
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் அக்கட்சியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததார். அத்துடன் எடியூரப்பாவுக்கு முதலமைச்சராக பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார். இன்னும் 15 நாட்களுக்குள் அவர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

    ஆட்சியமைக்க 112 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், பா.ஜ.க.வுக்கு இருப்பதோ 104 எம்.எல்.ஏ.க்கள். எனவே, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜ.க. வலை விரிக்கத் தொடங்கியிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    நேற்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில்  கூட சில எம்.எல்.ஏ.க்கள் வராமல் இருந்ததால் அவர்களை பா.ஜ.க. வளைத்துப்போட முயற்சி நடக்கலாம் என பேசப்பட்டது. ஆனால் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக சித்தராமையா தெரிவித்தார்.



    இந்நிலையில், எடியூரப்பா பதவியேற்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவை வளாகத்தில் காங்கிரசார் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷிடம், காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் நிலை குறித்து கேட்டனர்.

    இதற்கு பதிலளித்த சுரேஷ், ‘ஆனந்த் சிங் தவிர அனைத்து எம்.எல்.ஏ.க்களும் இங்கே உள்ளனர். ஆனந்த் சிங் மோடியின் பிடியில் உள்ளார்’ என்றார்.

    இதன் மூலம் ஆள் பிடிக்கும் வேலையை பா.ஜ.க. தொடங்கிவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக மற்றும் அமைச்சர்கள் பணியாற்றுவதாகவும், எம்எல்ஏக்களை பாதுகாப்பதுதான் தங்கள் திட்டம் என்றும் குமாரசாமி கூறியது குறிப்பிடத்தக்கது. #KarnatakaElection #CongressMLAMissing
    Next Story
    ×