search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மை விரலை நீட்டினால் மசால் தோசை, காபி இலவசம் - வாக்காளர்களுக்கு பெங்களூரு ஹோட்டல் சலுகை
    X

    மை விரலை நீட்டினால் மசால் தோசை, காபி இலவசம் - வாக்காளர்களுக்கு பெங்களூரு ஹோட்டல் சலுகை

    கர்நாடக சட்டசபை தேர்தலில் வாக்களித்து விட்டு வந்து மை தடவிய விரலை காட்டும் முதல்முறை வாக்காளர்களுக்கு காபி, மசால் தோசை இலவசமாக அளிப்பதாக பெங்களூருவில் உள்ள ஒரு ஹோட்டல் அறிவித்துள்ளது. #KarnatakaElection2018
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ளது. மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் மொத்தம் 55 ஆயிரம் 600 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 3.5 அரசு பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    ஆண் வாக்காளர்கள் 2.52 கோடி ஆண் வாக்காளர்கள், 2.44 பெண் வாக்காளர்கள், 4,552 மாற்றுப்பாலினத்தவர்கள் என மொத்தம் இந்த தேர்தலில் மொத்தம் 4.96 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதில் 18 - 19 வயது கொண்ட முதல்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் 15.2 லட்சம் பேர் உள்ளனர்.



    இந்நிலையில், முதல்முறையாக வாக்களிக்கும் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பெங்களூருவில் உள்ள ஒரு ஹோட்டல் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வாக்களித்து விட்டு மை விரலை காட்டும் இளைஞர்களுக்கு சூடான காபியுடன், மசால் தோசை இலவசமாக வழங்கப்படும். மேலும், வாக்களித்து விட்டு வரும் அனைவருக்கும் பில்டர் காபி இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

    வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்த சிறப்பு சலுகை வழங்கப்படுவதாக ஹோட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது. #KarnatakaElection2018

    Next Story
    ×