search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக தேர்தல் - 11 வேட்பாளர்களை கொண்ட இறுதிப் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது
    X

    கர்நாடக தேர்தல் - 11 வேட்பாளர்களை கொண்ட இறுதிப் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது

    கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 11 வேட்பாளர்களை கொண்ட இறுதிப் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது. #KarnatakaAssemblyElection #Congress
    பெங்களூரு:

    224 இடங்களை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தல் மே 12-ந் தேதி நடக்கிறது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். வேட்பு மனு தாக்கல் தாக்கலும், பிரசாரமும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்த தேர்தலில் போட்டியிடும் 218 வேட்பாளர்களை கொண்ட பட்டியல் கடந்த 15-ம் தேதி வெளியானது.



    முதல் மந்திரி சித்தராமையா மைசூரு மாவட்டத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி தொகுதி தேர்தல் அலுவலரிடம் 20-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.

    அவர் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள படாமி தொகுதியிலும் போட்டியிடப் போவதாக முன்னர் தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், 11 வேட்பாளர்களை கொண்ட இறுதி பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது. படாமி தொகுதி வேட்பாளராக சித்தராமையா அறிவிக்கப்பட்டுள்ளார். இவரைத்தவிர மேலும் 5 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    ஐந்து தொகுதிகளில் முன்னர் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் இந்த பட்டியலின் மூலம் மாற்றப்பட்டுள்ளனர். #KarnatakaAssemblyElection #Congress
    Next Story
    ×