search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாலு பிரசாத் வீட்டுக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு - நிதிஷ்குமார் உத்தரவு
    X

    லாலு பிரசாத் வீட்டுக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு - நிதிஷ்குமார் உத்தரவு

    ராப்ரிதேவி புகார் எதிரொலியால் லாலு பிரசாத் வீட்டுக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு அளிக்குமாறு நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். #LaluPrasadYadav #NitishKumar

    பாட்னா:

    லாலு பிரசாத் யாதவ் முன்பு பீகாரில் முதல்- மந்திரி மற்றும் ரெயில்வே மந்திரியாக பொறுப்பு வகித்தவர் என்பதால் அவருக்கு முக்கிய பிரமுகருக்கான ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அவர் கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டதால் அவரது வீட்டுக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.

    இதற்கு லாலுவின் மனைவியும், முன்னாள் முதல்-மந்திரியுமான ராப்ரிதேவி கண்டனம் தெரிவித்தார். தங்கள் குடும்பத்தை ஒழிக்க முதல்-மந்திரி நிதிஷ்குமார் சதித்திட்டம் தீட்டுவதாக குற்றம் சாட்டினார்.

    தங்களுக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என்று திருப்பி அனுப்பினார். இது தொடர்பாக முதல்-மந்திரி நிதிஷ்குமாருக்கு கடிதம் எழுதினார்.

    இந்த நிலையில் பெங்களூரில் இருந்து நேற்று காலை பாட்னா திரும்பிய நிதிஷ் குமார், ராப்ரிதேவியின் கடிதத்தை பரிசீலித்து லல்லு பிரசாத் வீட்டுக்கு மீண்டும் பாதுகாப்பு அளிக்குமாறு போலீசுக்கு உத்தரவிட்டார்.

    அத்துடன் லாலு பிரசாத் வீட்டுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை திரும்ப பெற்றது ஏன்? என்பது குறித்து மாநில உள்துறை அமைச்சகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். #LaluPrasadYadav #NitishKumar

    Next Story
    ×