search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாலு பிரசாத்"

    • பீகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து தர வேண்டும் என முதல் மந்திரி நிதிஷ் குமார் வலியுறுத்தினார்.
    • சிறப்பு மாநில அந்தஸ்து கோரி போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

    பாட்னா:

    பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல் மந்திரி நிதிஷ் குமார் பேசினார். அப்போது அவர் கூறுகையில், உயர் சாதியினர் முதல் ஏழைகள் வரை அனைவரின் முன்னேற்றத்திற்காக நாங்கள் உழைத்து வருகிறோம். பீகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து தர வேண்டும். சிறப்பு மாநில அந்தஸ்து கோரி போராட்டம் நடத்தப்படும். மத்திய அரசு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கினால், பீகாரை வளர்ந்த மாநிலமாக மாற்ற சிறிது காலம் போதும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காவிட்டால் பிரதமர் மோடி அரசை அகற்றுவோம் என முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, லாலு பிரசாத் கூறுகையில், பீகார் மாநிலத்துக்கு கண்டிப்பாக சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும். சிறப்பு அந்தஸ்து வழங்காவிட்டால் பிரதமர் மோடி அரசை அகற்றுவோம் என ஆவேசமாக குறிப்பிட்டார்.

    • மிசா பாரதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காலை ஆஜரானார்.
    • டெல்லியில் இன்று ஒரே நேரத்தில் விசாரணை நடத்தியது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புதுடெல்லி:

    பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டீரிய ஜனதாதள கட்சியின் நிறுவனருமான லாலுபிரசாத் யாதவ் 2004 முதல் 2009 வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய ரெயில்வே மந்திரியாக பணியாற்றினார்.

    அப்போது ரெயில்வே பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. பலரிடம் நிலத்தை லஞ்சமாக பெற்றுக் கொண்டு ரெயில்வேயில் வேலை வழங்கியதாக அவர் மீது புகார் கூறப்பட்டது.

    இதுதொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதேபோல அமலாக்கத்துறையும் விசாரணை நடத்துகிறது. இதைதொடர்ந்து லாலு மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

    இதில் கணக்கில் காட்டப்படாத ரூ.1 கோடி ரொக்கம், ரூ.15 கோடி மதிப்பிலான தங்க நகைகள், தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.600 கோடி மதிப்பிலான மோசடி வருவாய்க்கான ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டன என்று அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணைக்காக டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து லாலுபிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரிதேவி, மகள் மிசா பாரதி ஆகியோர் கடந்த 15-ந்தேதி ஆஜரானார்கள். அப்போது அவர்களுக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

    இந்நிலையில் ரெயில்வே பணிக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கு தொடர்பாக லல்லுபிரசாத் யாதவின் மகனும், பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் இன்று ஆஜராக சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது. இதை தொடர்ந்து அவர் இன்று காலை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக சென்றார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது "நாங் கள் எப்போதும் விசாரணை அமைப்புகளுக்கு ஒத்துழைக்கிறோம். ஆனால் தற்போது நாட்டின் நிலைமை என்னவென்றால் போராடுவது மிகவும் கடினமாகிவிட்டது. இதைத் எதிர்த்து போராட முடிவு செய்துள்ளோம். நாங்கள் வெற்றி பெறுவோம்" என்றார்.

    சி.பி.ஐ. அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு தேஜஸ்வி யாதவ் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து அவரி டம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. அவர் ஏற்கனவே 3 முறை சம்மனுக்கு ஆஜராகாமல் இருந்தார்.

    இதற்கிடையே இதே வழக்கில் லல்லுவின் மகளும், எம்.பி.யுமான மிசா பாரதி இன்று ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.

    இதை தொடர்ந்து மிசா பாரதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காலை ஆஜரானார். அவரி டம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி னார்கள். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வியிடம் சி.பி.ஐ.யும், மகள் மிசா பாரதியிடம் அமலாக்கத் துறையும் டெல்லியில் இன்று ஒரே நேரத்தில் விசாரணை நடத்தியது. டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ரெயில்வேயில் வேலை வழங்கியதாக லாலு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
    • விரிவான விசாரணைக்கு சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்து வருகிறது.

    ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவரும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான லல்லு பிரசாத் யாதவ் மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தபோது வேலைக்கு நிலம் என்ற மோசடியில் ஈடுபட்டு இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி தகவல்கள் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சுமார் 4 ஆயிரம் பேரிடம் நிலம் பெற்றுக் கொண்டு ரெயில்வேயில் வேலை வழங்கியதாக லல்லு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதுபற்றி விரிவான விசாரணைக்கு சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்து வருகிறது.

    • தேஜஸ்வி யாதவ் மற்றும் லாலுவின் 3 மகள்கள் வீடுகளில் அவர்களுக்கு சொந்தமான 24 இடங்களில் அதிரடி சோதனை நடந்தது.
    • லாலு பிரசாத் யாதவ் மகள்கள் வீடுகளில் இருந்து ரூ.70 லட்சம் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது.

    பாட்னா:

    லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது ரெயில்வே பணியில் சேர அவரது குடும்பத்தினர் பெயரில் நிலம் லஞ்சமாக பெற்றது தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்தது தொடர்பான வழக்கில் அமலாக்க பிரிவு அதிகாரிகள் லாலு பிரசாத் யாதவ் மனைவி ராப்ரிதேவி, அவரது மகனும் பீகார் துணை-முதல் மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் மற்றும் லாலுவின் 3 மகள்கள் வீடுகள் அவர்களுக்கு சொந்தமான 24 இடங்களில் அதிரடி சோதனை நடந்தது.

    இந்த சோதனையில் லாலு பிரசாத் யாதவ் மகள்கள் வீடுகளில் இருந்து ரூ.70 லட்சம் ரொக்கப்பணம், 1 கிலோ தங்க நகைகள், 540 கிராம் தங்க கட்டிகள் மற்றும் வெளிநாட்டு பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டு உள்ளது.

    • பீகாரில் இன்று லாலு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
    • லாலு கட்சி முக்கிய நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ரெயில்வே பணியிட ஒதுக்கீட்டில் மோசடி செய்து நிலம் பெற்ற வழக்கில் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி தலைவர் லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவியிடம் கடந்த வாரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். மேலும் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் பீகாரில் இன்று லாலு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    பீகாரில் உள்ள முக்கிய நகரங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. லாலு கட்சி முக்கிய நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து சோதனை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • முதல் மந்திரி நிதிஷ்குமார் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவை சந்தித்தார்.
    • அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். இச்சந்திப்பின் போது லாலுவின் மகன்கள் உடனிருந்தனர்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் பா.ஜ.க உடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் முறித்துக் கொண்டது. இதையடுத்து, ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி வைத்தார் அக்கட்சி தலைவரான நிதிஷ்குமார்.

    தொடர்ந்து, பீகார் முதல் மந்திரியாக நிதிஷ்குமாரும், துணை முதல் மந்திரியாக தேஜஸ்வி யாதவும் பதவியேற்றனர்.

    இதற்கிடையே, டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த லாலு பிரசாத் யாதவ் வீடு திரும்பினார்.

    இந்நிலையில், முதல் மந்திரி நிதிஷ்குமார் நேற்று ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவை சந்தித்துப் பேசினார். அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். இந்தச் சந்திப்பின் போது லாலுவின் மகன்கள் உடனிருந்தனர்.

    • மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட லாலு பிரசாத் உடல்நலக் குறைவால் ஜாமீனில் உள்ளார்.
    • உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று கொண்டு செல்லப்பட்டார்.

    புதுடெல்லி:

    மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரியும், ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் உடல்நலக் குறைவால் ஜாமீனில் இருந்து வருகிறார்.

    இதற்கிடையே, பாட்னாவில் உள்ள வீட்டில் கடந்த சனிக்கிழமை இரவு மாடிப்படியில் இருந்து லாலு பிரசாத் தவறி விழுந்ததில் அவரது கால் மற்றும் தோள்பட்டை பகுதியில் முறிவு, காயம் ஏற்பட்டது. இதையடுத்து பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் லாலு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், லாலு பிரசாத்தின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில் மேல் சிகிச்சைக்காக டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    பாட்னாவில் இருந்து லாலு பிரசாத் இன்று டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு லாலுவுக்கு டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    எரிபொருள், கியாஸ் சிலிண்டர்களின் விலை அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளன என ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
    இந்தியாவில் எரிபொருட்களில் விலை கடுமையான உயர்ந்துள்ளதால் விலைவாசிகள் அதிகரித்துள்ளது. இதனால் சாதாரண மக்கள் கடும் விலை கொடுத்து பொருட்களை வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் லாலு பிரசாத் யாதவ், மத்திய அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார்.

    தனது டுவிட்டர் பக்கத்தில் இரண்டு சமையல் எண்ணெய் பாட்டில்களின் புகைப்படத்துடன் ரூ.235 மற்றும் ரூ.265 என்ற விலை பட்டியலை குறித்து லாலு பிரசாத் யாதவ்,"இதனோடு நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?" என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், சமையல் எண்ணெயின் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், சாமானியர்கள் எப்படி காய்கறிகளை சமைப்பார்கள்?. எரிபொருள், சமையல் சிலிண்டர்களின் விலை அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளன. தற்போது போக்குவரத்து செலவும் அதிகரித்து, பொருட்களின் விலையையும் பாதிக்கிறது.

    ஆங்கிலேயர்களின் சித்தாந்தம் கொண்ட அரசை தேர்ந்தெடுப்பதற்கு ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் அதிக விலை கொடுக்கின்றனர்.

    இந்த 'கருப்பு பண்ணை சட்டங்களின்' தாக்கம் அடுத்த இரண்டு அல்லது நான்கு ஆண்டுகளில் தெரியும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
    ×