என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாலு பிரசாத் யாதவ்
    X
    லாலு பிரசாத் யாதவ்

    பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது: லாலு குற்றச்சாட்டு

    எரிபொருள், கியாஸ் சிலிண்டர்களின் விலை அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளன என ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
    இந்தியாவில் எரிபொருட்களில் விலை கடுமையான உயர்ந்துள்ளதால் விலைவாசிகள் அதிகரித்துள்ளது. இதனால் சாதாரண மக்கள் கடும் விலை கொடுத்து பொருட்களை வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் லாலு பிரசாத் யாதவ், மத்திய அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார்.

    தனது டுவிட்டர் பக்கத்தில் இரண்டு சமையல் எண்ணெய் பாட்டில்களின் புகைப்படத்துடன் ரூ.235 மற்றும் ரூ.265 என்ற விலை பட்டியலை குறித்து லாலு பிரசாத் யாதவ்,"இதனோடு நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?" என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், சமையல் எண்ணெயின் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், சாமானியர்கள் எப்படி காய்கறிகளை சமைப்பார்கள்?. எரிபொருள், சமையல் சிலிண்டர்களின் விலை அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளன. தற்போது போக்குவரத்து செலவும் அதிகரித்து, பொருட்களின் விலையையும் பாதிக்கிறது.

    ஆங்கிலேயர்களின் சித்தாந்தம் கொண்ட அரசை தேர்ந்தெடுப்பதற்கு ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் அதிக விலை கொடுக்கின்றனர்.

    இந்த 'கருப்பு பண்ணை சட்டங்களின்' தாக்கம் அடுத்த இரண்டு அல்லது நான்கு ஆண்டுகளில் தெரியும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×