search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி டுவிட்டரில் இளையராஜாவுக்கு தமிழில் வாழ்த்து
    X

    ஜனாதிபதி டுவிட்டரில் இளையராஜாவுக்கு தமிழில் வாழ்த்து

    பத்ம விபூஷண் விருது பெற்ற இசைஞானி இளையராஜாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். #PadmaAwards #Ilaiyaraaja
    புதுடெல்லி:

    மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், பொது நிர்வாகம். குடியுரிமை பணி, வர்த்தகம், தொழில் துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் சாதனை படைத்தவர்களுக்கு ‘பத்ம’ விருதுகளை வழங்கி கவுரவிக்கிறது.

    இந்த ஆண்டு 3 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்மபூஷண், 72 பேருக்கு பத்மஸ்ரீ என 84 பேருக்கு ‘பத்ம’ விருதுகள் வழங்கப்படும் என ஜனவரி 25-ம் தேதி அன்று மத்திய அரசு அறிவித்தது.

    இசைஞானி இளையராஜா உட்பட மூன்று பேருக்கு பத்ம விபூஷண் விருதும் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி உட்பட ஒன்பது பேருக்கு பத்ம பூஷண் விருதும் தமிழகத்தை சேர்ந்த நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உட்பட 72 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, இன்று மாலை டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை ஜனாதிபதி கோவிந்த் வழங்கினார்.

    இந்நிலையில், ஜனாதிபதியின் டுவிட்டர் பக்கத்தில் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது பெற்றதற்கு ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவரது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்து பதிவிடப்பட்டுள்ளது. இதேபோல், அந்தந்த மாநில மொழிகளில் பத்ம விருதுகள் பெற்றவர்களுக்கு பாராட்டுக்கள் பதிவிடப்பட்டுள்ளது.

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் டுவிட்டர் பக்கத்தில் இந்தி, ஆங்கிலம் தவிர தமிழிலும் கடந்த வாரம் முதல் பதிவிடப்பட்டு  வருவது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல், பிரதமர் மோடியும் பத்ம விபூஷண் இளையராஜாவுக்கு டுவிட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், இசைத்துறைக்கு இணையில்லா பங்களிப்பை வழங்கிய இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ள்ளார். #PadmaAwards #Ilaiyaraaja
    Next Story
    ×