search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எதிர்க்கட்சிகளுக்கு 27-ந் தேதி சரத்பவார் விருந்து - தெலுங்குதேசம் பங்கேற்குமா?
    X

    எதிர்க்கட்சிகளுக்கு 27-ந் தேதி சரத்பவார் விருந்து - தெலுங்குதேசம் பங்கேற்குமா?

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பாவர் வருகிற 27-ந் தேதி எதிர்க்கட்சிகளுக்கு விருந்து கொடுக்கிறார். இதில், மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்த தெலுங்குதேசம் பங்கேற்மா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. #SharadPawar
    புதுடெல்லி:

    பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்று திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. மோடியின் வலிமையை குறைக்க எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் சோனியாகாந்தி கடந்த வாரம் விருந்து கொடுத்தார்.

    இந்த நிலையில சோனியாவை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத்பவாரும் எதிர்க்கட்சிகளுக்கு விருந்து கொடுக்கிறார். வருகிற 27-ந் தேதி அவர் தனது வீட்டில் வைத்து விருந்து கொடுக்கிறார்.

    சோனியா காந்தி அளித்த விருந்தில் கலந்து கொண்டதை போல இந்த விருந்திலும் திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், சமாஜ்வாடி, தி.மு.க., ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கலந்த கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்- மந்திரியுமான மம்தா பானர்ஜி இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார். காங்கிரஸ் அளித்த விருந்தில் அந்த கட்சியின் சார்பில் சுதிப் எம்.பி. பங்கேற்றார். தற்போது மம்தாவே சரத் பவார் விருந்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.



    சரத்பவார் அளிக்கும் விருந்தில் தெலுங்கு தேசம் பங்கேற்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்கப்படுகிறது. சந்திரபாபு நாயுடு சமீபத்தில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகினார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து அவர் மத்திய அரசில் இருந்து விலகினார். அதோடு மோடியையும் கடுமையாக விமர்சித்தார்.

    மேலும் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பும் கொண்டு வருகிறார். இதனால் இந்த விருந்தில் தெலுங்கு தேசம் பங்கேற்கலாம்? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. #SharadPawar #NCP
    Next Story
    ×