search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளா வந்த லத்வியா நாட்டுப் பெண் மாயம்
    X

    ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளா வந்த லத்வியா நாட்டுப் பெண் மாயம்

    லத்வியா நாட்டில் இருந்து ஆயுர்வேத சிகிச்சை பெறுவதக்காக கேரளாவுக்கு வந்த 33 வயது பெண் கோவளம் கடற்கரை பகுதியில் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Latvianwoman #kerala #missing
    திருவனந்தபுரம்:

    ஐரோப்பா கண்டத்தில் பால்டிக் கடல் பகுதியில் லித்வேனியா மற்றும் எஸ்டோனியா நாடுகளுக்கு அமைந்துள்ள லத்வியா நாட்டை சேர்ந்த லிகா(33) என்ற பெண் மனஅழுத்த நோய்க்கு ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக சில வாரங்களுக்கு முன்னர் கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்துக்கு வந்தார். அவரது சகோதரி இல்ஸி என்பவரும் அவருக்கு துணையாக வந்திருந்தார்.

    பொத்தென்கோட் பகுதியில் உள்ள தனியார் ஆயுர்வேத மருத்துவமனையில் தங்கி லிகா சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், பிரபல சுற்றுலாதலமான கோவளம் கடற்கரையை சுற்றிப்பார்க்க விரும்பி கடந்த 14-ம் தேதி ஆட்டோ ரிக்‌ஷாவில் சென்றார்.

    ஆனால், மீண்டும் அவர் மருத்துவமனைக்கு திரும்பி வராததால் இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், லத்வியா நாட்டு தூதரகத்துக்கு தகவல் அளித்ததுடன், காணாமல்போன லிகாவை கண்டுபிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். #tamilnews #Latvianwoman #kerala #missing
    Next Story
    ×