search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் வீட்டு விலங்குகளுக்கு புற்றுநோய் மருத்துவமனை திறப்பு
    X

    கேரளாவில் வீட்டு விலங்குகளுக்கு புற்றுநோய் மருத்துவமனை திறப்பு

    கேரளாவில் உள்ள வீட்டு விலங்குகளுக்கு ஏற்படும் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி மருத்துவமனை திறக்கப்பட்டு உள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள வீட்டு விலங்குகளுக்கு ஏற்படும் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி மருத்துவமனை திறக்கப்பட்டு உள்ளது.

    சமீப காலமாக வீட்டு விலங்குகளும் புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்றன. எனவே முறையான சிகிச்சை அளிப்பதன் மூலம் அவற்றை புற்றுநோயில் இருந்து பாதுகாக்க முடியும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    நாடு முழுவதும் தற்போது வீடுகளில் செல்லமாக வளர்க்கப்படும் நாய், பூனை, ஆடு, மாடு போன்றவை புற்றுநோயால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், வீட்டு விலங்குகளுக்கு என தனியாக சிகிச்சை அளிப்பதற்காக திருவனந்தபுரம் அருகே மாநில கால்நடைத் துறை சார்பில் தனி புற்றுநோய் மருத்துவமனை திறக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து மாநில நோயியல் துறை டாக்டர்கள் கூறுகையில், வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளின் உடல்களில் ஏற்பட்ட கட்டிகளின் மாதிரிகளை கால்நடைத் துறை டாக்டர்கள் எங்களுக்கு அனுப்பி வைத்தனர். அவற்றை பரிசோதனை செய்து பார்த்தோம். அதில் பல விலங்குகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து, புற்றுநோயால் பாதிப்பு அடைந்துள்ள கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்க தனி மருத்துவமனை திறக்கப்பட்டு உள்ளது. இங்கு விலங்குகளை கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மனிதர்களுக்கு புற்றுநோய் எப்படி உருவாகிறது என்பதையே குறிப்பிட்டுச் சொல்ல முடியாத நிலையில் விலங்குகளை எப்படி புற்றுநோய் கிருமிகள் தாக்குகிறது என்பதை கண்காணித்து வருகிறோம். லேப்ரடார் மற்றும் அல்சாடியன் போன்ற உயர் ரக நாய்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் புற்றுநோய் கிருமிகள் அவற்றை தாக்குவதில்லை. ஆனால் மற்ற வகையான நாய்களுக்கு புற்றுநோய் கிருமிகள் தாக்குவது அதிகரித்து வருகிறது.

    இதேபோல் மற்ற வீட்டு விலங்குகளுக்கு ஏற்படும் புற்றுநோயால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமா எனவும் ஆய்வுசெய்து வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×