search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நங்கநல்லூரில் பாமக வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து  சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் வாக்கு சேகரிப்பு
    X

    நங்கநல்லூரில் பாமக வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் வாக்கு சேகரிப்பு

    பாமக வேட்பாளர் மருத்துவர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து ஆலந்தூர் தொகுதிக்கு உட்பட்ட நங்கநல்லூர் பகுதியில் அதிமுக காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் வீதிவீதியாக வாக்கு சேகரித்தார். #LokSabhaElections2019

    தாம்பரம்:

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் மருத்துவர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து ஆலந்தூர் தொகுதிக்கு உட்பட்ட நங்கநல்லூர் பகுதியில் அதிமுக காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் வீதிவீதியாக வாக்கு சேகரித்தார்.

    பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை விநியோகித்து மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார். அவர் பொதுமக்களிடம் பேசும்போது, நமது வேட்பாளர் வைத்திலிங்கம் நன்கு படித்தவர். பண்பாளர் டாக்டரான அவரால் உயிர்கள் காப்பாற்றப்படுகிறது. பொதுமக்கள் இதை சிந்தித்து பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டு மாம்பழ சின்னத்திற்கு வாக்களித்து வேட்பாளர் மருத்துவர் வைத்தியலிங்கத்தை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    அவருடன் ஆலந்தூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.என்.பி. வெங்கட்ராமன் அம்மன் வைரமுத்து சிவராஜ் எம்.எம்.பக்கிம் வானவம் எஸ். வரதராஜன், தனசேகர், ஆஷா பாஸ்கர் உட்பட கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக சென்று மாம்பழத்திற்கு வாக்கு சேகரித்தனர். #LokSabhaElections2019

    Next Story
    ×